ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்.. நியூஸ் 18 செய்தி எதிரொலியால் சாலை அமைக்க உடனடி உத்தரவு!

சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்.. நியூஸ் 18 செய்தி எதிரொலியால் சாலை அமைக்க உடனடி உத்தரவு!

உயிரிழந்த தந்தை

உயிரிழந்த தந்தை

3 கிலோ மீட்டர் தூரம் தந்தையை தோளில் தூக்கி சென்றும் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari) | Kanniyakumari

கன்னியாகுமரி அருகே சாலை வசதி இல்லாததால் நோயால் பாதித்த தந்தையை அவரது மகன் தோளில் சுமந்து சென்றும் உயிரிழந்த சம்பத்தை தொடர்ந்து அப்பகுதியில் உடனடியாக சாலை வசதி அமைக்க வேண்டும் என ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் அருகே  மேற்கு தொடர்சி மலையோர பகுதியில் கடந்த 12 ஆம் தேதி  கோலஞ்சிமடம் ஆதிவாசி பழங்குடியின கிராமத்தில் சாலைவசதி மற்றும்  பாலம் இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையை அவரது மகன் தோளில் மருத்துவமனைக்கு தூக்கி சென்றும் தந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து பலரும் சாலை வசதி செய்து தர வேண்டும் எனவும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலமும் மழை, வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க | தமிழர் மரபில் நாக வழிபாட்டை பறை சாற்றும் கன்னியாகுமரி நாகராஜா கோவில்- வரலாறு தெரியுமா?

இந்த செய்தி  நியூஸ் 18 தொலைக்காட்சியிலும், இணையதளப்பக்கத்திலும் செய்தி வெளியானது.  தற்போது இந்த செய்தியின் எதிரொலியாக அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த இடத்தில் தரமான பாலம் அமைக்கவும் சாலை வசதி இல்லாத அனைத்து வீடுகளுக்கும் பொதுவான போக்குவரத்து சாலை அமைக்கவும் விரைந்து திட்ட மதிப்பீடு வழங்குமாறு செயல் அலுவலருக்கு ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதை தமிழக அரசுக்கு பரிந்துரைத்து விரைவில் தீர்வு ஏற்படுத்தும் என உறுதி அளித்துள்ளார்.

Published by:Anupriyam K
First published:

Tags: Death, Kanniyakumari, Lack of road facility