ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு 40 அடி பிரமாண்ட கட் அவுட்.. கால்பந்து விளையாட்டே சுவாசம்.. - உலகக்கோப்பைக்கு தயாரான குமரி கிராமம்

மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு 40 அடி பிரமாண்ட கட் அவுட்.. கால்பந்து விளையாட்டே சுவாசம்.. - உலகக்கோப்பைக்கு தயாரான குமரி கிராமம்

சாலைகளில் வைத்திருக்கும் வீரர்களின் படங்கள்

சாலைகளில் வைத்திருக்கும் வீரர்களின் படங்கள்

கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரின் ஆள் உயர கட் அவுட்டுகள் முதல் 40 அடிக்கும் மேல் உயரமான பிராம்மாண்ட கட் அவுட்டுகள் சாலையின் இருபுறங்களிலும் வைத்து பிரமாதப்படுத்தி உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கால்பந்து விளையாட்டை சுவாசிக்கும் இளம் வீரர்களை கொண்ட கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமத்தில், உலக கோப்பை கால்பந்து போட்டியை உற்சாகத்துடன் வரவேற்கும் வகையில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உலகில் பல்வேறு விளையாட்டுகள் இருந்தாலும் உலகளவில் அதிக அளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கால்பந்து திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் வேறு எங்கும் காணாத அளவில் தமிழகத்தில் கடை கோடி கடற்கரை கிராமமான குமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தில் பச்சிளம் குழந்தை முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள், கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் என ஒரு கிராமமே கால்பந்து விளையாட்டை தங்களது உயிர் மூச்சாக நேசிக்கின்றனர்.

ஒரு கால்பந்து விளையாட்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள், விளையாட்டுக்கு தேவையான உபகரணங்கள் இல்லாத நிலையிலும், மத்திய மாநில அரசுகளின் எந்த உதவியும் கிடைக்காமல் இருந்தும், மாநில அளவிலும், தேசீய அளவிலும் சுமார் 50 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை உருவாக்கி உள்ளது இந்த கிராமம். அவர்கள் பலர் தற்போது பல்வேறு அணிகளில் விளையாடி வருவதோடு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். தூத்தூர் கிராமத்தில் உள்ள பள்ளி மைதானங்களில் சென்று பார்த்தால் பச்சிளம் குழந்தைகள் முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள், மீன் பிடி தொழில் செய்யும் இளைஞர்கள் என அனைவரும் தினம் தோறும் பயிற்சி மேற்கொள்வதும் பல்வேறு அணிகளுடன் கால்பந்து போட்டி டூர்னமெண்ட் ஆடுவதையும் பார்க்க முடியும்.

இதையும் படிக்க : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? -  இதை  மிஸ் பண்ணாதீங்க!

இந்நிலையில் கத்தார் நாட்டில் நடைபெற இருக்கும் உலககோப்பை கால்பந்தாட்ட போட்டியை கொண்டாடும் விதமாக தூத்தூர் மீனவ கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும், உலக நாடுகளில் உள்ள தலைச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரின் ஆள் உயர கட் அவுட்டுகள் முதல் 40 அடிக்கும் மேல் உயரமான பிராம்மாண்ட கட் அவுட்டுகள் வைத்து பிரமாதப்படுத்தி உள்ளனர்.

மேலும் கிராமம் முழுவதும் தோரணங்கள் கட்டியும், சுவர்களில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர்களின் ஓவியங்கள் பெயிண்டால் வரைந்தும் உலக கோப்பை போட்டியை உற்சாகத்துடன் வரவேற்க தயாராகி வருகின்றனர். இது பல்வேறு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த கடற்கரை கிராமத்தில் கால்பந்து விளையாட்டை சுவாசிக்கும் வீரர்களை ஊக்குவிக்க அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்து தர இந்த பகுதி மக்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

கால்பந்து விளையாட்டை உயிர் மூச்சாக சுவாசிக்கும் இந்த இளம் வீரர்களை ஊக்குவிக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ள நிலையில் இனியாவது இதற்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர் பார்ப்புடன் பலர் தங்களின் முக்கிய தொழிலான மீன் பிடி தொழிலில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை கால்பந்து விளையாட்டில் தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர தீவிரம் காட்டி வருகின்றனர்.

Published by:Raj Kumar
First published:

Tags: FIFA, FIFA World Cup, Football, Kanniyakumari