Home /News /kanniyakumari /

மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்... தேங்காய் பட்டணம் மீனவர்கள் கோரிக்கை...

மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்... தேங்காய் பட்டணம் மீனவர்கள் கோரிக்கை...

தேங்காய் பட்டணம் 
 - மீன்பிடி துறை முகத்தில் விசைப்படகு  தரை தட்டியது.

தேங்காய் பட்டணம் - மீன்பிடி துறை முகத்தில் விசைப்படகு  தரை தட்டியது.

தேங்காய் பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு  தரை தட்டியது. இதனால் அரசு போர் கால அடிப்படையில் மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தேங்காய் பட்டணம் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
குமரி மாவட்டம் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தை மையமாக கொண்டு சுமார் 9000 ஆழ்கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகுகளும், 5000க்கும் அதிகமான பைபர் படகுகளிலும் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில்  மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடை காலம் கடந்த 1-ம் தேதி முடிந்து. அதனால் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க ஆயத்தமாகி உள்ளனர்.

இதற்கிடையில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால் கடல் சீற்றம் அதிகமானது. இதனால் 4-ம் தேதி வரை கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என இந்திய வானிலை மைய அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் தற்போது இயற்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் தேங்காபட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தூத்தூர் பகுதியை சேர்ந்த டைட்டஸ் என்பவருக்கு விசைப்படகில் 12 மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க புறப்பட்டனர்.

படகு புறப்பட்டு, துறைமுக முகத்துவார பகுதியில் சென்ற போது, அலையின் சீற்றத்தால் ஏற்பட்ட திடீர் மணல் திட்டுகளில் படகு மாட்டியது. எவ்வளவோ முயன்றும் படகை ஆழ்கடலில் செலுத்த முடியவில்லை. இந்த போராட்டத்தில் விசை படகின் என்ஜின் பழுதடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து கடல் அலையின் வேகத்தால் படகை அடித்து கரையில் ஒதுக்கி, படகு தரை தட்டி நின்றது.

இந்த சம்பவம் தெரிந்த உடன் அருகில் இருந்த  மீனவர்கள் திரண்டு படகை மீட்கும் முயற்சியில் ஈடு பட்டனர். இது தொடர்பாக மீன் வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்தை பார்வையிட்டு படகை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.

Also see... சுதா மருத்துவமனைக்கு ஆதரவாக தனியார் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்

இது தொடர்பாக மீனவர்கள் கூறுகையில், “ தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவு வாயில் பகுதி கோளாறுகளால் இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே அரசு போர் கால அடிப்படையில் மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Fisherman, Kanniyakumari

அடுத்த செய்தி