முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / கன்னியாகுமரியில் பள்ளி வகுப்பில் ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியர் போக்சோவில் கைது...

கன்னியாகுமரியில் பள்ளி வகுப்பில் ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியர் போக்சோவில் கைது...

ஆசிரியர் கிறிஸ்துதாஸ்

ஆசிரியர் கிறிஸ்துதாஸ்

Kanniyakumari | இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்கவுண்டன்சி வகுப்பில் ஆசிரியர் ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவலறிந்த  குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியரை கைது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில்அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது . இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில்  11-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவர் மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது.  மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு மாணவிகளிடம் அவர் ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில்

கடந்த 6-ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து வாக்கு வாதம் நடைபெற்று வந்த நிலையில் அங்கு வந்த தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி எம்பெருமாள் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாரளித்தனர்.

Also see... எங்கள் வாழ்கையும் இனி மாறபோகிறது: நரிகுறவர்கள்

இந்த நிலையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

First published:

Tags: Govt School, Kanniyakumari, Pocso, Sexual harassment, Teacher