கன்னியாகுமரி வந்த கோவா ஆளுநர் இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் துவக்கம் சுவாமி விவேகானந்தர் என பேசியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். முன்னதாக ஆலயத்திற்கு வந்த கோவா ஆளுநருக்கு ஆலய தந்திரி சந்தோஷ் சுவாமிகள் தலைமையில் பூர்ணகும்ப மரியாதை செலுத்தபட்டது. அதை தொடர்ந்து ஆளுநர் ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் விழாமேடையில் பேசிய அவர், இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல் பிரணவமந்திரம் சுவாமி விவேகானந்தர் துவங்கி வைத்ததுதான். அப்போதே சுதந்திர போராட்டம் தொடங்கிவிட்டது. அதற்காக அவர் ஆயுதமெடுத்து போராடவில்லை. பாரத பிரதமர் மோடி நமது பிராண வாயுவான யோகாவை உலக நாடுகளில் கொண்டு செல்லவேண்டுமென கூறிய போது பலரும் எதிர்த்தனர். ஆனால் இன்று 163 நாடுகள் யோகாவை கட்டாயமாக்கியுள்ளனர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனிக் தனது வேத நூலான பகவத்கீதையை தொட்டு சத்தியம் செய்து பதவியேற்றார். இதன்மூலம் விவேகானந்தர் கூறியதை போன்று பாரதம் உலகிற்கு குருவான மாறியுள்ளது என தெரிவித்தார்.
மேலும், இதற்கு முன் இருந்த ஆட்சியில் இந்தியாவை மற்ற நாடுகள் பழிகூறுவது மட்டுமே நடைபெற்றது. ஆனால் தற்போது உலக நாடுகளில் 5ஆம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. நம்மை அடிமை செய்த ஆங்கில பிரிட்டன் அரசாங்கத்தை பின்னுக்கு தள்ளி நாம் முன்னேறியுள்ளோம். உலகத்தில் சிறந்த அரசாங்கம் தமது அரசாங்கம் என மற்ற நாடுகள் கூறுவதாகவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Goa, Governor, Kanniyakumari, Local News