ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

திருவள்ளுவர் சிலை டூ விவேகானந்தர் பாறை.. கண்ணாடி பாலம்.. வேகமெடுக்கும் பணிகள்!

திருவள்ளுவர் சிலை டூ விவேகானந்தர் பாறை.. கண்ணாடி பாலம்.. வேகமெடுக்கும் பணிகள்!

திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர் சிலை

விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து, கடல் சீற்றம் காரணமாக பல நேரங்களில் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுவதில் அதிக ஆர்வம் கொள்கின்றனர்.

இந்நிலையில், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து, கடல் சீற்றம் காரணமாக பல நேரங்களில் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை. இதனால், இவ்விரு இடங்களையும் இணைக்கும் வகையில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, இரண்டு பாறைகளின் உறுதித்தன்மையை பரிசோதிப்பதற்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு, சென்னை ஐஐடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

First published:

Tags: Kanniyakumari, Swami Vivekananda, Thiruvalluvar