ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

சிறுமிகளை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை - தாயும் உடந்தை என தந்தை பரபரப்பு புகார்

சிறுமிகளை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை - தாயும் உடந்தை என தந்தை பரபரப்பு புகார்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Kanyakumari : கன்னியாகுமரி மாவட்டம் பாளையம் அருகே 2 சிறுமிகளை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து பாலியல் தொல்லை செய்வதாக எழுந்த பரபரப்பு புகார் குறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் பாளையம் அருகே இரண்டு சிறுமிகளை அறையில் அடைத்து வைத்து மர்ம நபர்களை அழைத்து வந்து பாலியல் ரீதியிலான சித்ரவதை செய்வதாக சிறுமிகளின் தந்தை புகார் அறித்த நிலையில், சிறுமிகளை மீட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழித்துறை அடுத்த கழுவன்திட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி, இவரது மனைவி விஜி. இந்த தம்பதியருக்கு 15-வயது மற்றும் 13-வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இரண்டு மகள்களும் தாயுடன் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், ரவி கடந்த 18ஆம் தேதி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் மனைவியுடன் கருத்து வேறுபாட்டில் இருந்தாலும் கேரளாவிற்கு வேலைக்கு சென்று திரும்பும் போது, தனது பிள்ளைகளை சந்திப்பது வழக்கம் என்று தெரிவித்தார்.

தற்போது தனது மனைவி பாளையம் பகுதியை சேர்ந்த ஆஸ்டின் ராஜா, பிருந்தா கேத்தரின், மெர்லின் காட்சா ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், பிருந்தா கேத்தரின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவர்களுடன் அழைத்து சென்று தங்க வைத்து தனது குழந்தைகளை அவர்கள் குழந்தைகள் என்றும் பாராமல் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் புகார் அளித்தார்.

மேலும், மர்ம நபர்களை அழைத்து வந்து பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியதாகவும் தனது மனைவியும் அதற்கு உடந்தையாக இருப்பதாகவும், தனது இளைய மகள் 14ஆம் தேதி தன்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததோடு  தன்னை அழைத்து செல்லுமாறும் கதறி அழுதார் என்றும் தெரிவித்தார்.  18ம் தேதி கேரளாவில் இருந்து வந்த நான் பாளையத்தில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டி இருந்ததாகவும் எனவே அந்த நபர்களிடம் இருந்து தனது இரு மகள்களையும் மீட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்தார்.

ஆனால் புகார் அளித்தும் அனைத்து மகளிர் போலீசார் கடந்த 3 நாட்களாக, குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என ரவி குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளிடம் புகாரளித்தார். இந்த நிலையில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண் குழந்தைகளை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்திருந்த பிருந்தா கேத்தரின் மற்றும் தாயார் உட்பட நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் கேள்வி எழுப்பிய போது, காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டத்தில் உள்ள உயரதிகாரிகளிடமோ அல்லது என்னிடமோ கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த விவகாரம் கவனத்திற்கு வரவில்லை என்றும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Must Read : சோதனைசாவடியில் குறட்டைவிட்டு தூக்கிய காவலர்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்த பரிசு

இதனிடையே பத்திரிகையாளர்களிடம் பேசிய பிருந்தா கேத்தரின், விஜி என்பவர் இரண்டு பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து கல்யாணம் பண்ணி கொடுக்கணும் என்று என் கையில் லீகலாக எழுதி தந்து ஒப்படைத்து விட்டார்கள் என விளக்கமளித்தார்.

ஆனால், முறையாக சட்டப்படி அந்த பெண் குழந்தைகளை அவர் தத்தெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறை முறையான, முழுமையான விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Kanyakumari, Sexual harrasment