கன்னியாகுமரி மாவட்டம் குட்டைகாடு பகுதியை சேர்ந்த சுரேந்திரன். கூலி தொழிலாளியான இவரது மனைவி சிஜிமோள் தம்பதிக்கு சுஷ்விகாமோள் 4, வின்சிஜோ13,சுஜிலின்ஜோ 9 என மூன்று குழந்தைகள் உள்ளனர் சுரேந்திரன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.அவ்வப்போது குடித்து விட்டு வந்து மனைவி பிள்ளைகளை அடித்து வந்ததாகவும் கூறப்படும் நிலையில் நேற்று முந்தினம் இரவு குடித்துவிட்டு வந்து குழந்தைகளை தாக்க முயன்ற போது தப்பியோடி உள்ளனர்.
தப்போடிய குழந்தைகள் ரப்பர் தோட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அப்போது 4 வயது சிறுமி சுஷ்விகாமோளை பாம்பு கடித்துள்ளனது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர்ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது சிறுமி உயிரிழந்துள்ளார்.
Also Read : அசுரன் பாணியில் அரங்கேறிய சோகம்... மகனுக்காக ஊர் பஞ்சாயத்து காலில் விழுந்த தந்தை மரணம்
இந்த சோக சம்பவம் அரங்கேறிய நிலையில் இந்த மூன்று குழந்தைகளும் தந்தை குடித்து விட்டு வந்து தாக்குகிறார் காப்பாற்றுங்கள் என உதவி கேட்கும் வீடியோ வைரலானது. இந்த நிலையில் நேற்று குழந்தையின் உடல்கூற் ஆய்வு முடிந்து இறுதிச்சடங்கு நடந்தன. இறந்த குழந்தையின் தாய் சிஜிமோள் திருவட்டார் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சுரேந்திரனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Kanniyakumari)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.