Home /News /kanniyakumari /

சோதனைசாவடியில் குறட்டைவிட்டு தூங்கிய காவலர்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்த பரிசு

சோதனைசாவடியில் குறட்டைவிட்டு தூங்கிய காவலர்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்த பரிசு

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

kanniyakumari | குமரி சோதனை சாவடியில் தூங்கிய காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்  கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.  

Gகுமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி , கனிமவளம் உட்பட  கடத்தலை தடுக்க தமிழக கேரள  எல்லை பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைத்து கடத்தல் பொருட்கள் கேரளாவிற்கு கொண்டு செல்வதை தடுக்க கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் திடீரென எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் ஆய்வு  மேற்கொண்டார்.

தமிழக கேரள எல்லையை இணைக்க கூடிய முக்கிய பகுதியாக களியக்காவிளை சோதனைசாவடியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த சோதனை சாவடியில் மார்த்தாண்டம் காவல் நிலைய காவலர் ஜெயகுமார் பணியில் இருந்துள்ளார். பரபரப்பாக இருக்கும் இரு மாநில எல்லையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை சோதனை சாவடியில் கடமை உணர்வை மறந்து  ஜெயகுமார் குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருப்பதை பார்த்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார்.

Also see... தாழ்வான மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம்-

தொடர்ந்து சம்பவ இடத்திலேயே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அந்த காவலர் ஜெயகுமாரை பணியிடை நீக்கம் செய்தார். மேலும் மாவட்டத்தில் இது போன்று கடமை உணர்ச்சியை உணராமல் செயல்படும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும் என எச்சரித்தார்.  எஸ்.பி யின் நடவடிகை பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Kanniyakumari, Police, Sleep

அடுத்த செய்தி