முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு..

தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு..

கன்னியாகுமரி - மீனவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி - மீனவர் உயிரிழப்பு

Kanniyakumari | தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு மீனவர்கள் பலியாவதை கண்டு மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதியான மாடலாம் முதல் நிரோடி வரை 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு துறைமுகம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் இந்த துறைமுகத்தில் முகத்துவாரம் சரியில்லாத காரணத்தால் மணல் திட்டு ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் இதுவரை இன்றைய உயிரிழப்பும் சேர்த்து 15 மீனவர்கள் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் மட்டும் ஐந்து விபத்துகள் நடந்துள்ளது. இதைபோல் நேற்று மீன்பிடிக்க சென்ற பைபர் படகு ஒன்று ராட்சத அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மீனவர் துாக்கிவீசப்பட்ட நிலையில் சக மீனவர்கள் உதவியுடன் நீந்தி கரை சேர்ந்து உள்ளார்.  சிறுகாயங்களுடன் வீடு திரும்பினார்.

Also see... அழகர்கோயில் - திறக்கும் கதவும், திறக்காத கதைகளும்!

இந்நிலையில் இன்று மீன் பிடிக்க சென்று கரை திரும்பும் போது படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சைமன் என்ற மீனவர் உயிரிழந்தார். இப்படிஅடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் காரணமாக மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே  துறைமுகத்தின் முகத்துவராத்ததை ஆழப்படுத்தி மீனவர் உயிரை காப்பாற்ற மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Fisherman, Fishing Boats Starnded, Kanniyakumari