முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / FIFA World Cup 2022: அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடி தீர்த்த குமரி மக்கள்..

FIFA World Cup 2022: அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடி தீர்த்த குமரி மக்கள்..

குமரி மக்கள்

குமரி மக்கள்

Kanniyakumari | உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி மெசியின் அர்ஜென்டின அணியின் வெற்றியை உற்சாகத்துடன் குமரி மீனவ கிராம ரசிகர்கள் கொண்டாடினர். 

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

கால்பந்து விளையாட்டை சுவாசிக்கும் குமரி மாவட்டம் தூத்தூர் , சின்னதுறை, இரையுமன்துறை , மார்த்தாண்டன் துறை உட்பட மீனவ கிராமங்களில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில்  பெரிய LED திரைகள் அமைத்து அர்ஜெண்டீனா - குரேஷியா உலக கோப்பை அரையிறுதி போட்டியை காண உற்சாக கொண்டாட்டங்களுடன் மாலை முதல் காத்திருந்தனர்.

உலக கோப்பை கால்பந்து போட்டி துவக்க விழாவிற்கு முன்னதாகவே இங்குள்ள கால்பந்து விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் தங்களது கிராமங்களில் தங்களுக்கு பிடித்தமான நெய்மர், ரொனால்டோ, மெசி உள்ளிட்ட வீரர்களின் பிரமாண்ட கட் அவுட்டுகள் வைத்து தோரணங்கள் கட்டி அலங்கரித்து உலக கோப்பை போட்டியை வரவேற்றனர்.

இதனால் அந்த கிராமமே விழா கோலம் பூண்டதுள்ளது.  இந்த கிராம மக்களுக்கு கால்பந்து விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் தங்களுக்கு பிரியமான வீரர்களான நெய்மர், ரொனால்டோ போன்ற வீரர்களின் அணிகள் அரையிறுதிக்குள் நுழையாமல் வெளியேறி அந்த வீரர்களின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த வீரரான மெஸ்ஸியின் அணிக்காக ஆதரவு தெரிவித்து மெஸ்ஸி இந்த உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் நேற்று நடந்த அர்ஜெண்டீனா - குரேஷியா அரையிறுதி போட்டி பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. அதனால் நள்ளிரவு முதல் கிராமங்களில் அங்காங்கே 10 க்கும் மேற்பட்ட இடங்களில் பிரமாண்ட LED திரைகள் அமைத்து கோலாகலமாக கொண்டாடி போட்டியை கண்டு களித்தனர்.

இப்பகுதி மெஸ்ஸி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அர்ஜெண்டினா அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் கோலை மெஸ்ஸியே அடித்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட கொண்டாட்டம் அதன் உச்சத்தை அடைந்தது.

Also see... FIFA World Cup 2022: 6வது முறையாக இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா.. கெத்து காட்டிய மெஸ்ஸி!

தொடர்ந்து முதல் பகுதியில் 2 கோள்கள் பெற்று முன்னிலை வகித்த அணி இரண்டாம் பகுதியிலும் கோல் அடித்து 3 - 0 என்ற கணக்கில் குரேஷியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து  இந்த கிராமங்களில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Argentina, FIFA, FIFA World Cup 2022, Fisherman, Kanniyakumari