ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

2 குழந்தைகளின் தாய் கொடூரமாக வெட்டிப்படுகொலை.. நள்ளிரவில் கணவன் வெறிச்செயல் - குமரியில் அரங்கேறிய பயங்கரம்

2 குழந்தைகளின் தாய் கொடூரமாக வெட்டிப்படுகொலை.. நள்ளிரவில் கணவன் வெறிச்செயல் - குமரியில் அரங்கேறிய பயங்கரம்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

Crime News : கன்னியாகுமரியில் இருகுழந்தைகளின் தாயை நள்ளிரவில்  கணவனே வெட்டிகொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரில் நள்ளிரவில் மனைவியை வெட்டிக்கொன்று கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங் இவரது மகள் ஜெபபிரின்ஸா ( வயது32). இவரும்  அழகிய மண்டபத்தை சேர்ந்த எபனேசன் என்பவரும்  காதலிந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெபசேபன்,ஜெப ஆகாஷ் ஆகிய இருமகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஜெபபிரின்ஸா தற்போது தனது தந்தை ஜெபசிங் வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் அழகு நிலையத்தில்  பயற்சிக்காக சென்று வருகிறார்.  இந்நிலையில் அவர் உடையணிவதில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல்.. மாயமான இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு - மதுரையில் பகீர் சம்பவம்

இந்நிலையில்  நேற்றிரவு 10மணிக்கு தன்னுடைய மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு அழகியமண்டபத்திலுள்ள வீட்டிற்கு எபனேசர்  கொண்டு சென்றார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மருதவிளை சானல்கரை அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு எபனேசர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெபபரின்ஸாவின் தலை மற்றும் கழுத்து பக்தியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.இதில் படுகாயம் மடைந்த ஜெபபரின்ஸா  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில்  தக்கலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைபற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  ஜெபசிங் கொடுத்த புகாரின் அடிப்படையில்  எபனேசர் மீது வழக்குபதிவு செய்த தக்கலை காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில்  போலீஸாரில் கைது நடவடிக்கைக்கு பயந்து எபனேசர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருகுழந்தைகளின் தாயை நள்ளிரவில்  கணவனே வெட்டிகொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Kanniyakumari, Local News, Tamil News