ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

தள்ளாடும் வயதில் தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி.. கன்னியாகுமரியில் மனதை உருக்கும் சம்பவம்

தள்ளாடும் வயதில் தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி.. கன்னியாகுமரியில் மனதை உருக்கும் சம்பவம்

தற்கொலை செய்துகொண்ட தம்பதி

தற்கொலை செய்துகொண்ட தம்பதி

Kanniyakumari News : கன்னியாகுமரி மாவட்டத்தில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பேருந்து நிலையத்தை அடுத்த குழியூர் பகுதியில் உள்ள ஒரு சிறிய வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வயதான தம்பதி ஜன்னல் கம்பியில் நைலான் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த தம்பதியர் யார்? தற்கொலைக்கான காரணம் ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியை சேர்ந்த 87 வயதான மரம் வெட்டும் தொழில் செய்து வந்த பாலையன் மற்றும் அவரது மனைவி செல்லம் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்களது மகன் சந்திரசேகர் மற்றும் மகள் சாந்தி ஆகியோர் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். வயதான பாலையன், செல்லம் தம்பதியர் தங்களுக்கு சொந்தமான ஒரு சிறிய வீட்டில் தனியாக வசித்து வந்தும் தெரியவந்தது.

இதையும் படிங்க : செல்போன் கடைக்காரர் மீது தாக்குதல்... திருவண்ணாமலையில் கஞ்சா போதையில் இளைஞர் அட்டகாசம்

டெய்லர் வேலை பார்க்கும் மகன் சந்திரசேகர்  குடி பழக்கத்திற்கு அடிமையாகி தாய் - தந்தையை சரிவர கவனிக்காமல்  சுற்றி வந்தார். இதனால் வறுமையில் வாடிய பாலையன் தள்ளாடும் வயதிலும் சிறு சிறு வேலைகளுக்கு சென்று அதில் வரும் வருமானத்தில் தனது மனைவியை பராமரித்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் செல்லத்தின் கைகள் செயலிழந்து படுத்த படுக்கையானார். பெற்ற மகளோ, மகனோ ஆதரவு கரம் நீட்டாததால் பாலையன் தன்னால் இயன்ற அளவு பிறரிடம் உதவிகள் பெற்று தனது மனைவிக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

தற்போது பாலையனும் நோய்வாய்ப்பட்ட நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மகன் சந்திரசேகரும் கண்டு கொள்ளாத நிலையில் அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தம்பதியர் தள்ளப்பட்டனர்.

இதனால் இருவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

தொடர்ந்து மருத்துவம் பார்க்காமல் அடுத்த வேளை உணவுக்கே போராடும் மனைவி தன் முன்னே படும் வேதனை பார்த்து பாலையன் மன வேதனையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை பாலையைன் தனது மகள் சாந்தியை தொடர்பு கொண்டு எங்களை யாரும் கண்டு கொள்ளாததால் தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார். ஆனால் மகள் வந்து பார்க்காத நிலையில் மனம் உடைந்த பாலையன் வீட்டில் இருந்த நைலான் கயிற்றை எடுத்து தனது மனைவியுடன் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து இரணியல் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து தம்பதியரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க : தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொடூர கொலை... 2வது கணவன் கைது... அம்பத்தூரில் பகீர் சம்பவம்!

தள்ளாடும் வயதில் கவனிக்க தவறிய ஊதாரி மகனால் மனம் உடைந்து வயதான பெற்றோர் உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Published by:Karthi K
First published:

Tags: Crime News, Kanniyakumari