முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / மணப்பெண்ணை விட்டு பிரிய மனமில்லை.. பாசப்போராட்டம் நடத்திய நாய்.. வைரலாகும் வீடியோ..!

மணப்பெண்ணை விட்டு பிரிய மனமில்லை.. பாசப்போராட்டம் நடத்திய நாய்.. வைரலாகும் வீடியோ..!

பாசப்போராட்டம் நடத்திய நாய்

பாசப்போராட்டம் நடத்திய நாய்

நாகர்கோவிலில் திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்ற பெண்ணிடம் பாசப் போராட்டம் நடத்திய வளர்ப்பு நாய்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagercoil, India

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த சித்திரை திரு மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு செல்வன். இவரது மகள் சுகப்பிரியா வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். சுகப்பிரியாவின் திருமணம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் நடைபெற்று முடிந்த அன்று மணமகன் வீட்டிற்கு சுகப்பிரியா புறப்பட்டபோது, வீட்டில் அவர் வளர்த்த நாய் இடைவிடாமல் குரைக்க தொடங்கியது. சுகப்பிரியாவை விடாமல் முன் கால்களால் பற்றி கொண்டு அங்குமிங்கும் ஓடியது. நீண்ட நேரம் வளர்ப்பு நாயின் பாசப் போராட்டத்தை பார்த்து திருமணத்துக்கு வந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

வளர்ப்பு நாயை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல் கனத்த இதயத்துடன் சுகப்பிரியா சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

செய்தியாளர் : சரவணன் ஐயப்பன் (நாகர்கோவில்)

First published:

Tags: Dog, Nagercoil, Viral, Viral News, Viral Video, Viral Videos