ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

கன்னியாகுமரியில் விசைப்படகு ஓட்டுனரை வீடுபுகுந்து தாக்கிய திமுக பிரமுகர் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

கன்னியாகுமரியில் விசைப்படகு ஓட்டுனரை வீடுபுகுந்து தாக்கிய திமுக பிரமுகர் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

வீடுபுகுந்து தாக்கும் வீடியோ காட்சிகள்

வீடுபுகுந்து தாக்கும் வீடியோ காட்சிகள்

Kanniyakumari | கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலுக்கு செல்லும்போது படகில் வைத்து நிலைதடுமாறி விழுந்ததில் சகாய வினோவிற்கு முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kanniyakumari, India

  கன்னியாகுமரியில் விசைப்படகு ஓட்டுனரை வீடுபுகுந்து தாக்கும் திமுக பிரமுகர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சகாய வினோ. இவர் கன்னியாகுமரி வடக்கு தெருவை சார்ந்த திமுக ஒன்றிய பிரதிநிதி  இன்பம் என்பவரது விசைப்படகில் டிரைவராக கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

  இதனிடையே, கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை பொறுத்தவரையில் விசைப்படகில் பணிபுரியும் வேலை ஆட்கள் மற்றும் டிரைவருக்கு படகின் உரிமையாளர்கள் முன்பணம் அளித்து தங்களது படகில்  பணி வழங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

  இதையும் படிங்க : 111.2 அடி உயரம் கொண்ட மஹாசிவலிங்கம்.. வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் சான்றிதழை பெற்ற சிவ பார்வதி கோவில் லிங்கம்

  இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலுக்கு செல்லும்போது படகில் வைத்து நிலைதடுமாறி விழுந்ததில் சகாய வினோவிற்கு முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை  தொடர்ந்து இன்பத்தின் படகில் ஓட்டுநராக பணி செய்து வந்துள்ளார்.

  இதையடுத்து, மீண்டும் முதுகு வலி அதிகமாக காணப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக 2 வாரங்களுக்கு மேலாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் விசைப்படகு  உரிமையாளர்  இன்பம் தான் வழங்கிய முன் பணத்தை கேட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சகாய வினோவின் வீட்டிற்கு ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.

  இதையும் படிங்க : தமிழகத்தில் முதல்முறையாக நகர, மாநகரசபை கூட்டம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று குறை கேட்கிறார்?

  அப்போது ஏற்பட்ட வாய்தகராறில்  திமுக பிரமுகர் இன்பம்  சகாயவினோ மற்றும் அவரது மனைவி லின்சியை ஆபாச வார்த்தைகள் கூறியதோடு வினோவை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த சகாயவினோ ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இதுகுறித்து அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அதன்படி கன்னியாகுமரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  திமுக பிரமுகர் படகு ஓட்டுனரை  வீடுபுகுந்து ஆபாச வார்த்தை பேசி, கன்னத்தில் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  செய்தியாளர் : சரவணன் - நாகர்கோவில் 

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Kanniyakumari