ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

பணம் தர முடியாது ஓசியில் சென்னை கூட்டிக்கிட்டு போ..! திமுககாரன் எனக் கூறி பேருந்தை வழிமறித்து போதை ஆசாமி ரகளை

பணம் தர முடியாது ஓசியில் சென்னை கூட்டிக்கிட்டு போ..! திமுககாரன் எனக் கூறி பேருந்தை வழிமறித்து போதை ஆசாமி ரகளை

மதுபோதையில் ஆசாமி ரகளை

மதுபோதையில் ஆசாமி ரகளை

Kanniyakumari District News : கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திமுக கட்சியை சேர்ந்தவர் என கூறி  சென்னை சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தை வழிமறித்து ஓசியில் பயணம் செய்ய கேட்டு போதை ஆசாமி ரகளையால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த பேருந்து மார்த்தாண்டம் அருகே சிராயன்குழி பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிகொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் பேருந்தை வழிமறித்து தான் தலைமை செயலகத்தில் பணியாற்றுவதாகவும், தான் திமுக கட்சியை சேர்ந்தவர் என்றும்  கூறினார்.

பின்னர் தன்னை ஓசியில் சென்னை  அழைத்து செல்லுமாறும் கூறி போதையில் ரகளை செய்தார். இதையடுத்து பேருந்து ஊழியர்கள் பணத்தை செலுத்தி பயணம் செய்யுமாறு பலமுறை கூறினர். ஆனால் அவர் பேருந்தை விடவில்லை.

இதையும் படிங்க : சாலையில் விழுந்த செல்போனை எடுக்க சென்ற மாணவன் கார் மோதி பலி : விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்!

ஒரு கட்டத்தில் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட துவங்கினார். இதையடுத்து பொதுமக்கள் அப்பகுதியில் குவிய துவங்கியுடன் போதை ஆசாமி அப்பகுதியிலிருந்து நழுவினார். பின்னர்  ஒரு மணிநேரத்திற்கு பிறகு பேருந்து அப்பகுதியிலிருந்து புறப்பட்டு சென்றது.

இரவு நேரத்தில் தனியார் பேருந்தை வழிமறித்து ஓசியில் பயணிக்க முயன்ற திமுக கட்சியை சேர்த்த போதை ஆசாமியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், குமரி மாவட்டம் நித்திரவிளை காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட போராட்டத்தில் அந்த போதை ஆசாமியான மர்ம நபர்  கலந்து கொண்டுள்ளதால் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் சென்னையிலிருந்து வந்தாரா என்பது குறித்து காவல்துறை விசாரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Crime News, Kanniyakumari