ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

கிறிஸ்துமஸ் பண்டிகை - கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகை - கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகை

Kanyakumari District | டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், 24ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

இயேசு கிறிஸ்து பிறப்பை கிறிஸ்துமஸ் (Christmas) என்று ஆண்டுதோறும் உலக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த விழா கிறிஸ்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, 12 நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாக இருந்து வருகிறது.

மேலும், கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, என்று பலரின் பங்களிப்புகளையும் நினைவு படுத்துவதாகவும் இருந்து வருகிறது.

இந்த கொண்டாட்டம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி, அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கிறது. அதன்படி, டிசம்பர் 25 முதல் நாளாக பல இடங்களில் கொண்டாட்டங்கள் தொடங்கி, பன்னிரண்டாவது நாள் கொண்டாட்டம் நிறைவடைகிறது.

இந்த ஆண்டும் வழக்கம்போல கிறிஸ்துமஸ் பண்டிகை இம்மாதம் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் உலகம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு , வரும் சனிக் கிழமை (டிசம்பர் 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் மா. அரவிந்த் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த பண்டிகையானது அதிக மக்களால், வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

Must Read : கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

அன்று, அனைத்து மாநில அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜனவரி 11ஆம் தேதியை வேலை நாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Christmas, Kanyakumari, Local News