குமரி மாவட்டம் செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 10-ந் தேதி இரவு கிறிஸ்டினா கடைக்கு வந்த ஆணும் பெண்ணும் பழம் வேண்டும் என கேட்டுள்ளனர். அவர் பழத்தை எடுத்துக்கொண்டிருக்கும்போது திடீரென கிறிஸ்டினா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர்.
இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதேபோன்ற சம்பவங்கள் கன்னியாகுமரியில் வேறு சில இடங்களில் நடந்தது தெரியவந்துள்ளது. அனைத்து குற்றச் சம்பவங்களிலும் ஒரு பெண்ணும் ஆணும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் தமிழக-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆண், பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரித்ததில் அவர்கள்தான் குமரியில் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டது.
கேரள மாநிலம் பள்ளிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (34). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. வெள்ளறடை ஆனப்பாறை பகுதியைச் சேர்ந்த ராஜூ மனைவி சாந்தகுமாரி (40). இவர் கணவரை விட்டு பிரிந்து மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
சதீஷ் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்தார். அப்போது ஓட்டலுக்கு அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் சாந்தகுமாரி பணிபுரிந்தார். அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனால் இருவரும் வேலைக்கு செல்லாமல் வெளியே உல்லாசமாக சுற்றத் தொடங்கியுள்ளனர். இதனிடையே பணத் தேவை ஏற்பட கன்னியாகுமரிக்கு வந்து நகைகளை திருடி அதனை விற்று ஊர் சுற்றியுள்ளனர்.
இருவரையும் போலீசார் கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chain Snatching, Kanniyakumari, Theft