ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

கையெடுத்து கும்பிட்டும் விடவில்லை... கட்டிட தொழிலாளி அடித்து கொலை... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...

கையெடுத்து கும்பிட்டும் விடவில்லை... கட்டிட தொழிலாளி அடித்து கொலை... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

Kanniyakumari News | புதூர் பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் ராஜதுரை பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kanniyakumari, India

  கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே  எறும்புக்காடு புல்லுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை(50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜதுரை வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு  வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பவில்லை.

  இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில்  மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் ராஜதுரை சடலமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தில்  விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

  மேலும் பிணமாக கிடந்த ராஜதுரை உடலில் காயங்கள் இருந்தது. மர்ம நபர்கள் அவரை செங்கற்களால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சடலமாக கிடந்த ராஜதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதையும் படிங்க : கோவை கார் வெடிப்பு.. என்ஐஏ கைக்கு வந்த லிஸ்ட்.. கோவையை சல்லடை போடும் புலனாய்வு முகமை!

  மேலும் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சிசிடிவி கேமராவில் ராஜதுரை அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.

  அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்  ராஜதுரையை அடித்து உதைப்பதும், கையெடுத்து கும்பிட்டு  கெஞ்சியும் விடாமல்  விரட்டி விரட்டி அடித்து  அவரை கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி  காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் : சரவணன் - நாகர்கோவில் 

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Kanniyakumari