ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

காதலனுக்கு போன் போட்டு திட்டிய தாய்... விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

காதலனுக்கு போன் போட்டு திட்டிய தாய்... விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Kanniyakumari | குமரி மாவட்டம் பளுகலை அடுத்த குட்டைக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், பயிலும் கேரள மாணவி தற்கொலை முயற்சி செய்ததில் 2 கால்களும் உடைந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரம் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

குமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லை பகுதியான பளுகலை அடுத்த குட்டைக்கோடு பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி விடுதியில் தங்கி இருந்து கல்வி பயின்று வருகிறார். இவரது தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் மாணவிக்கு கல்லூரி படிப்பு முடிந்த உடன் திருமணம் செய்து கொடுக்க வேண்டி அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவிக்கு கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் காதல் உள்ளதாகவும் இதனை அறிந்த மாணவியின் தாயார் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவியின் தாயார் மகள் காதலிப்பதாக தெரிய வந்த வாலிபரின் தொடர்பு எண்ணையும் வாங்கி அவரிடமும் தனது மகளை விட்டு செல்லுமாறு திட்டி உள்ளார்.

இதனை அந்த வாலிபர் ரெக்கார்ட் செய்து மாணவிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார். ஏற்கனவே மன வருத்தத்தில் இருந்த மாணவி இதனையும் கேட்ட உடன் நேற்று முன்தினம் இரவு விரக்தியில் தான் தங்கி இருந்த விடுதியில் இருந்து கல்லூரியின் மேல் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கீழே விழுந்ததில் மாணவியின் இரண்டு கால்களும் உடைந்த நிலையில் உயிருக்கு போராடியபடி வலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த சக மாணவிகள் மற்றும் விடுதி காப்பாளர்கள் மாணவியை மீட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் பளுகல் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் முதலில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை முயற்சி செய்ய முயன்றதாக கூறிய நிலையில் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் காதல் விவகாரத்தில் மாணவி கல்லூரி கட்டிடத்தின் மேலிருந்து கீழ் குதித்து தற்கொலை செய்ய முயன்றது  தெரியவந்துள்ளது.

Also see...போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு கண்டக்டரிடம் போதை இளைஞர் ரகளை.. வீடியோ

தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: College student, Commit suicide, Crime News, Kanniyakumari