ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

காதலி கொடுத்த ஜூஸை குடித்த கல்லூரி மாணவன் உயிரிழப்பு... கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்.

காதலி கொடுத்த ஜூஸை குடித்த கல்லூரி மாணவன் உயிரிழப்பு... கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்.

உயிரிழந்த ஷாரோன்ராஜ்

உயிரிழந்த ஷாரோன்ராஜ்

இளம் பெண் கசப்பான மருந்து குடித்து வருவதாக சொன்னதையடுத்து அது எப்படி இருக்கும் என வாங்கி குடித்து பார்த்ததாக ஷாரோன் ராஜ் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே காதலி கொடுத்த ஜூஸை குடித்த பின் காதலன் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் மீது இறந்த வாலிபரின் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில் பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் எல்லை கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜன் என்பவரது மகன் ஷாரோன்ராஜ்(23). பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ஷாரோன் ராஜ் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்துள்ளார். இதற்கிடையே அந்த இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், வீட்டுக்குத் தெரியாமல் ஷாரோன் ராஜை அந்த இளம் பெண் காதலித்து வந்திருக்கிறார்.

ஷாரோன் ராஜிக்கு கல்லூரி சம்பந்தப்பட்ட ரெக்கார்ட் நோட்டுக்கள் எழுதி கொடுப்பது போன்ற உதவிகளை இளம் பெண் செய்து வந்துள்ளார்.  இரண்டு நோட்டு எழுதி முடித்து வைத்திருப்பதாக கடந்த 14-ம் தேதி அந்த இளம் பெண் ஷாரோன் ராஜை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். ஷாரோன் ராஜ் தனது நண்பரின் பைக்கில் காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். நண்பர் வெளியே பைக்கில் காத்திருந்திருக்கிறார். ஷாரோன்ராஜ் அந்த பெண்ணின் வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது அவரது பெற்றோர் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்த ஷாரோன் ராஜ் வாந்தி எடுத்துள்ளார்.

Read More : இன்டிகோ விமான எஞ்சினில் பற்றிக்கொண்ட தீ... பீதியடைந்த பயணிகள்

பைக்கில் இருந்த அவரது நண்பர் ஏன் வாந்தி எடுக்கிறாய் எனக் கேட்டதற்கு ஜூஸ் குடித்தது ஒத்துக்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார் ஷாரோன் ராஜ். இந்த நிலையில் வீட்டுக்குச் சென்றபிறகு அவரது உடல்நிலை மோசமானது. அதைத் தொடர்ந்து பாறசாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த ஷாரோன் ராஜின் உள்ள உறுப்புகள் செயல் இழந்துள்ளன. அவர் ஆசிட் போன்ற விஷம் குடித்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஷாரோன் ராஜின் தந்தை போலிஸில் புகார் அளித்ததை தொடர்ந்து மஜிஸ்திரேட் மருத்துவமனையில் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளார். அந்த இளம் பெண் கசப்பான மருந்து குடித்து வருவதாக சொன்னதையடுத்து அது எப்படி இருக்கும் என வாங்கி குடித்து பார்த்ததாக ஷாரோன் ராஜ் கூறியுள்ளார். கசப்பை போக்க அந்த பெண் ஜூஸ் கொடுத்துள்ளார். அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் போனதாக ஷாரோன் ராஜ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி ஷாரோன் ராஜ் இறந்துவிட்டார்.

எனவே அந்த இளம் பெண் கொடுத்த ஜூசில் எதாவது கலாந்திருக்கலாம் என பெற்றோர் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். ஆனால், தான் குடித்து வந்த மருந்தைதான் ஷாரோன் ராஜிக்கு கொடுத்ததாகவும், ஜூஸில் வேறு எதுவும் கலக்கவில்லை எனவும் இளம் பெண் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இளம் பெண் மற்றும் இறந்த வாலிபர் இடையே உள்ள  மொபைல்  போனில் வாட்ஸப் சாட்டிங் மற்றும் உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை கைப்பற்றி இது குறித்து கேரளா மாநிலம் பாறசாலை  போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: College student, Death, Kanniyakumari