கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அடுத்த ஆற்றூர் சந்திப்பில் இருந்து குட்டகுழி செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த பிரேஸ்லி ரெனி என்பவர் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
இவரது அருகில் வேர்க கிளம்பி பகுதியை சேர்ந்த விஜி என்பவர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். பின்னர் இருவரும் மதுபான கடையிலிருந்து வெளியே வந்து சாலையிலும் தாக்கிக் கொண்டனர்.
இதனிடைய, பிரஸ்லி ரெனி தனது நண்பரான உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவரை அழைத்துள்ளார். இதை அடுத்து மதியழகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார் அப்போது அங்கு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்ததை பார்த்ததும் மோதலை தடுக்க முயன்றுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்போது விஜி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதியழகனை சாரமாறியாக குத்தியுள்ளார். மேலும் பிரஸ்லி ரெனிக்கும் உடம்பில் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதையடுத்து காயமடைந்து துடித்துக் கொண்டிருந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உள்ளனர்.
Must Read : களத்திலேயே உயிர்விட்ட கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்திற்கு ரூ.50,000 உதவி தொகை வழங்கிய நெய்வேலி எம்.எல்.ஏ.
இந்த கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kanniyakumari, Kanyakumari, Tasmac