கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கோட்டகம் ஸ்ரீ கிருஷண்சுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட திருமண மண்டபத்தை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்.
முன்னதாக கோட்டகம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி திருக்கோவில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுதர் தமிழிசை கூறுகையில், “பெண்களுக்காக மிகப்பெரிய கொள்கையை வகுத்து கொடுத்தவர் பாரதி. ஜி20 மாநாடு குறித்து ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் ஜி20 உலக மாநாட்டில் இந்தியா தலைமை தாங்கும் செய்தியை கிராமந்தோறும் எடுத்துரைக்கவேண்டும் என்று கூறினார்.
தமிழகத்தில் 4 இடங்கள், ஹைதராபாத்தில் 6 இடங்கள், புதுவையில் 1 இடம் என மொத்தம் 200 மாநாடுகள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இளைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சி படுத்த முடியும். ஆளுநராக இருப்பதால் மதம் சார்ந்து பேச முடியாது.
அனைத்து மத நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை சொல்கிறேன். தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர்கள் ஏன் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு வாழ்த்து கூறுவதில்லை என்பதற்கு எனக்கு விடை கிடைக்கவில்லை.
எம்மதமும் சம்மதம் என்ற கொள்ளையை அனைவரும் கடைபிடிக்கவேண்டும் . ஆளுநர் இப்படி பேசலாமா என்றால் ஒரு தனிநபராக ஒரு பிரஜையாக எனது கருத்தை கூறுவதற்கு உயிமையுண்டு” என்றார்.
மேலும், சென்னை மேயர் பியியா முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி சென்றது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தவர், “பாரதி பிறந்த மண்ணில் பெண்கள் மதிக்கப்படவேண்டும். சென்னை மேயர் விருப்பட்டு தான் முதல்வரின் வானத்தில் தொங்கியபடி சென்றாரா என்பது தெரியாததால் இதுகுறித்து கூற தான் விரும்பவில்லை” என்று கூறினார்.
குமரி மாவட்டம் தக்கலையில் காலங்காலமாக கடைபிடித்துவரும் காவல்நிலையத்தில் குற்றசெயல்கள் குறைய காவடி எடுப்பது குறித்து கூறுகையில், “அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் பாகுபாடின்றி சமமாக அங்கீகாரம் அரசாங்கங்கள் கொடுக்கவேண்டும்” என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தமாகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Bjp state president tamilisai soundararajan, CM MK Stalin, Kanniyakumari, Mayor Priya