ஹோம் /நியூஸ் /Kanniyakumari /

பேருந்து சக்கரத்தின் முன்பு விழுந்த மூதாட்டி.. சுதாரித்த ஓட்டுநர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி

பேருந்து சக்கரத்தின் முன்பு விழுந்த மூதாட்டி.. சுதாரித்த ஓட்டுநர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

நிலைதடுமாறி சாலையில் விழுந்த மூதாட்டி பேருந்து சக்கரத்தில் சிக்காமல் உயிர்தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சாலையில் விழுந்த மூதாட்டி பேருந்து டயரில் சிக்காமல்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய   சிசிடிவி  காட்சி வைரலாகிறது.

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாழக்குடி பகுதிக்கு செல்லும் கிராம்ப்புற சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் புல் மேய்வதற்காக ஆட்டுக்குட்டி ஒன்று கயிற்றால் கட்டி  வைக்கப்பட்டிருக்கிறது. அதனை மூதாட்டி ஒருவர் அவிழ்த்து கொண்டு இருக்கும் போது, ஆட்டுக்குட்டி அவரது காலில் சுற்றி கொண்டதோடு  கயிறு மூதாட்டியின் கால் களை பிணைத்து கொண்டது.

  இதனால் நிலைதடுமாறிய மூதாட்டி சாலையில் விழுந்தார். கண் இமைக்கும்  நேரத்தில் சாலையில் வந்த அரசு பேருந்தின் முன்பக்க  சக்கரத்தின் அருகில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இது தொடர்பான காட்சிகள் அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி யில் பதிவாகியுள்ளது. இந்தக்காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில்  வைரலாகி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  செய்தியாளர் ஐ.சரவணன் ( நாகர்கோவில்)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Kanniyakumari, Tamil Nadu, Viral Video