ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

கார் கவிழ்ந்து விபத்து... காரை பொதுமக்களே மீட்கும் வீடியோ வைரல்.!

கார் கவிழ்ந்து விபத்து... காரை பொதுமக்களே மீட்கும் வீடியோ வைரல்.!

கார் விபத்து

கார் விபத்து

Kanniyakumari | குமரி மாவட்டம் காப்புகாடு பகுதியில் சொகுசு கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துகுள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் சாலையின் நடுவே கவிழ்ந்து கிடக்கும் வாகனத்தை பொதுமக்கள் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் நேற்று இரவு வெட்டுமணியில் இருந்து புதுக்கடை நோக்கி வந்த இன்னோவா சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு கார் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படாத நிலையில், காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபர், போலீசார் விசாரணையில் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த நபரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see... நெல்லையப்பர் திருக்கோவிலில் நடந்த பரிவேட்டை நிகழ்ச்சி...

மேலும் சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த வாகனத்தை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நிமிர்த்தி சாலையின் ஓரத்திலேயே நிறுத்தி வைத்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Kanniyakumari, Road accident, Viral Video