முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / இறந்த ராணுவ வீரருக்கு அரசு இழப்பீடு : பங்கு கேட்ட மனைவியை அடித்துக்கொன்ற மாமனார், கொழுந்தன்!

இறந்த ராணுவ வீரருக்கு அரசு இழப்பீடு : பங்கு கேட்ட மனைவியை அடித்துக்கொன்ற மாமனார், கொழுந்தன்!

கொலையான துர்கா, கைதான ஆறுமுகம், மது

கொலையான துர்கா, கைதான ஆறுமுகம், மது

Kanniyakumari News | அருகில் கிடந்த சிமெண்ட் செங்கல் கல் மற்றும் கம்பால்  தலையில் துர்காவை தாக்கினர். இதில் துர்கா பலத்த காயமடைந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் மனைவியை கல் மற்றும் கம்பால் தலையில் தாக்கி கொலை செய்த அவரது மாமனார் மற்றும் கொழுந்தனாரை இரணியல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் மணக்கரையை சேர்ந்தவர்  ஐயப்பகோபு(42). இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் விடுப்பில் வீட்டிற்கு வந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அரசிடமிருந்து இழப்பீடாக வழங்கப்பட்ட பணம் அவரது மனைவி துர்காவுக்கு கிடைத்துள்ளது. 

இந்நிலையில், அந்த பணத்தில் தங்களுக்கும் பங்கு தர வேண்டும் என்று கேட்டு அவரது மாமனார் ஆறுமுகம் பிள்ளை மற்றும் கொழுந்தனார் மது ஆகியோர் சேர்ந்து துர்காவிடம் நேற்று மதியம் தகராறு செய்தனர்.

இதையும் படிங்க : Exclusive: ராஜீவ் கொலை வழக்கு.. விடுதலை தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது -நளினி

அப்போது, அருகில் கிடந்த சிமெண்ட் செங்கல் கல் மற்றும் கம்பால்  தலையில் துர்காவை தாக்கினர். இதில் துர்கா பலத்த காயமடைந்தார். பின்னர் உறவினர்கள் துர்காவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து துர்காவின் உடன் பிறந்த அண்ணன் பகவத்சிங் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் துர்காவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க : தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இதனைத்தொடர்ந்து, மாமனார் ஆறுமுகம் பிள்ளை, கொழுந்தனார் மது ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Crime News, Kanniyakumari, Murder