சர்வதேச சுற்றுலா மையமாக உள்ள கன்னியாகுமரியில் கடந்த 2000ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கடல் நடுவில் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. வள்ளுவர் சிலை உப்பு காற்றில் இருந்து சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம் ,
இந்தமுறை சிலை பராமரிப்பு பணியானது ரூபாய் ஒரு கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.
133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு, சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது. பின்னர் ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் இரசாயன கலவை பூசப்பட்டது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவு பெற்ற நிலையில் தற்போது 7 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Also Read : திருடிய சைக்கிளை பழைய இரும்பு கடையில் போட சென்ற போது சிக்கிய போதை ஆசாமி!
இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு குழாம் பகுதியில் காத்திருந்தனர். 8 மணிக்கு துவங்க வேண்டிய படகு சேவை தாழ்வான கடல் நீர் மட்டம் காரணமாக 2 மணி நேரம் தாமதமாக துவங்கப்பட்டது. படகில் சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர்ந்தூவி மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் இன்று வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இது குறித்து பேட்டி அளித்த சுற்றுலா பயணிகள், பிரம்மாண்ட சிலையை அருகில் இருந்து பார்த்தது மிகவும் பிரம்மிப்பகாவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று கூறினர். மேலும், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறையை இணைக்கும் பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் - ஐ.சரவணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanyakumari, Thiruvalluvar, Tourist spots