ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

''பாஜகவினர் தலை துண்டாக்கப்படும்''.. நாகர்கோவில் மேயர் பேச்சால் சலசலப்பு.. புகாரளித்த பாஜகவினர்!

''பாஜகவினர் தலை துண்டாக்கப்படும்''.. நாகர்கோவில் மேயர் பேச்சால் சலசலப்பு.. புகாரளித்த பாஜகவினர்!

நாகர்கோவில் மேயர் மகேஷ்

நாகர்கோவில் மேயர் மகேஷ்

சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வரும் நிலையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Nagercoil, India

  பாஜகவினரை மிரட்டும் தொனியில் பேசிய நாகர்கோவில் மேயர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் கோட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  மாநகர திமுக சார்பில் நடைபெற்ற இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் கழுத்தில் கைவைத்து செய்கை காண்பித்து புரிந்துகொள்ளுங்கள் என  பாஜக கட்சியினருக்கு பொது மேடையில் மிரட்டல் விடுத்து ஆவேசமாக பேசினார்.

  திமுக. நிகழ்ச்சிக்கு ஊறுவிளைவிக்க பாஜகவினர் ஈடுபட்டால்  அவர்கள் கொடிகளை மட்டுமல்ல, அவர்கள் தலையை நீட்டினால் தலையும் துண்டாக்கப்படும் என ஆவேசமாக தெரிவித்தார்.

  இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  ALSO READ | ரேஷன் கடை பொங்கல் பரிசுத்தொகுப்பில் புது மாற்றமா? தமிழக அரசின் நியூ ப்ளான்!

  இந்நிலையில்  அவரது பேச்சை  கண்டித்தும், கொலைமிரட்டல் விடுத்து பேசியுள்ளதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் நாகர்கோவில் தொகுதி பாஜக எம். எல்.ஏ., எம்.ஆர். காந்தி தலைமையில் பாஜகவினர் இரவில் கோட்டார் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர்.

  செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: BJP, FIR Filed, Mayor, Viral Video