திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளையில் இருந்து வருகிறார். இவரை அதிமுக ஒ.பன்னீர்செல்வம் அணியின் செய்தி தொடர்பாளர் இள.புகழேந்தி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “நானும் நாஞ்சில் சம்பத்தும் திராவிட இயக்கத்தில் நீண்ட நாட்களாக ஒன்றாக பயணித்தவர்கள். அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். ஓபிஎஸ்-சும் தொலைபேசியில் அவரிடம் நலம் விசாரித்தார். சசிகலாவை முன்னிலைப்படுத்தி பல்வேறு தியாகங்களை செய்து வழக்குகளை சந்தித்தோம். சசிகலாவை ஆதரித்து தவறு செய்துவிட்டதை நினைத்து இப்போது வருந்துகிறேன். ஒரு கட்சியை தன் சொந்த வசப்படுத்தி ஜெயலலிதா வகித்த பதவியை வகிக்கமாட்டேன் என்று சொல்லி கட்சியை தனது கைவசப்படுத்த எடப்பாடி பழனிசாமி முயல்கிறார். என்னுடைய பொதுநோக்கு அதிமுக இணையப்படவேண்டும். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டபட்ட ஓபிஎஸ் தலைமையில் அதிமுக செயல்படவேண்டும் என்பதே.
ஆட்சி தொடரவேண்டுமென்பதற்காக பாஜக ஒரு இணைப்பை ஏற்படுத்தியது. பாஜக எங்களை ஆட்டி படைக்கிறது என்பதை ஏற்றுகொள்ளமுடியாது. ஏற்கனவே பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது ஈரோடு இடைத்தேர்தலுக்காக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவைத்தலைவர் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மகன் உசேனை நாங்கள் எப்படி அவை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும். அதிமுக அலுவலகத்தை தாக்கியதாக எங்களை குற்றவாளிகளாக கூறி அழகுபார்த்ததை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.
உச்சநீதிமன்றம் ஓபிஎஸ்யையும் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்கவேண்டும். எல்லோரும் சொன்னதை ஏற்றுக்கொள்ளாத பழனிசாமி, ஓபிஎஸ்-சின் ஆலோசனைகளை பெற்றுதான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பில் எக்களுக்கு ஒரு பக்கம் வெற்றிதான். மறுபுறம் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று பார்ப்போம். தவறாக முடிவுகளை எடுத்தால் தேர்தல் ஆணையத்திடம் சொல்வோம். பாஜக கட்சி எங்களுக்கு நல்லெண்ணத்தில் அறிவுரையும், ஆலோசனைகளையும் கூறலாமே தவிர எங்களிடம் ஒருபோதும் அதிகாரம் செலுத்த முடியாது. யாருக்கும் பயப்படமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்” என புகழேந்தி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, BJP, Kanniyakumari, OPS, Pugazhendhi