கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியால் தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாட் பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு பண்ணைகளில் கடந்த ஒரு வாரமாக பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 1500 வாத்துகள் உயிரிழந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று மனிதர்களுக்கு பரவாத வகையில், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கோவையில் பாஜக பந்த் நடத்தினால் நடவடிக்கை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள இடங்களில், கோழி, வாத்து இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்துள்ள தனிக்குழு, ஆலப்புழாவுக்கு விரைந்துள்ளது. இக்குழு பறவைக் காய்ச்சல் பரவுவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட எல்லையான படந்தால் மூடு பகுதியில் சோதனை சாவடி அமைத்துள்ள கால்நடை பராமரிப்பு துறையினர் கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மேலும் தமிழக வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.