ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை

Kanniyakumari | கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை நீடிக்கிறது. வெண்ணிற ஆடை போர்த்தியது போல் ஆக்ரோஷமாக கொட்டும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பால் குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரியில் கடந்த ஐந்து நாட்களாக மலையோர பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணை தனது அபாய அளவை எட்டியதை தொடர்ந்து அணையிலிருந்து 4000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் இன்றும் மழையின் அளவு குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது.

இதனால் படிப்படியாக திறந்து விடப்பட்ட நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளையும் தாண்டி நீச்சல் குளத்தையும் மூழ்கடித்தவாறும், கல் மண்டபத்தை சூழ்ந்த வாறும் தண்ணீர் செல்கிறது.

Also see... ஜவ்வாது மலை புத்தூர் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்ற இளைஞர் மரணம்

இதனால் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாகவும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Falls, Kanniyakumari