Home /News /kanniyakumari /

தக்கலையில் லோடு ஆட்டோ-கார் மோதி விபத்து... மூன்று பேர் படுகாயம்

தக்கலையில் லோடு ஆட்டோ-கார் மோதி விபத்து... மூன்று பேர் படுகாயம்

தக்கலையில் லோடு ஆட்டோ-கார் மோதி விபத்து... பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்...

தக்கலையில் லோடு ஆட்டோ-கார் மோதி விபத்து... பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்...

Kanniyakumari | கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற பைக் மற்றும் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் மூன்று பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் சொகுசு கார், பைக் மற்றும் ஆட்டோ மீது மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்று கிழமை மாலை அதிவேகத்தில் வந்த கேரள பதிவெண் கொண்ட கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிந்த பைக் மற்றும் சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. 

இதில் பைக்கில் இருந்த கணேசன் என்பவர் சொகுசு காரின் பானட் மீது சிக்கி பல அடி தூரம் காருடன் இழுத்து செல்லப்பட்டார். மேலும், லோடு ஆட்டோவில் இருந்த பத்மனாபபுரம் பகுதியை சேர்ந்த மணி (70), காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மாகின் வயது (42), மோட்டார் சைக்கிளில் வந்த தக்கலை ராமன்பறம்பை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் காயமடைந்தனர் .

படுகாயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் சொகுசு காரை ஓட்டி வந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அஸ்வந்த் பெஞ்சமின் என்பவரை கைது செய்தனர்.

Also see... அரசு பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் - சிறப்பு பேருந்து இயக்க நம்பியூர் மக்கள் கோரிக்கை

இந்த நிலையில் அந்த சொகுசு கார் பைக் மற்றும் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: CCTV, Crime News, Kanniyakumari, Road accident

அடுத்த செய்தி