ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

விசாரணைக்கு சென்ற இடத்தில் பெண்ணை தாக்க முயன்ற எஸ்.ஐ - வைரலாகும் வீடியோ

விசாரணைக்கு சென்ற இடத்தில் பெண்ணை தாக்க முயன்ற எஸ்.ஐ - வைரலாகும் வீடியோ

விசாரணைக்கு சென்ற இடத்தில் பெண்ணை தாக்கிய உதவி ஆய்வாளர்

விசாரணைக்கு சென்ற இடத்தில் பெண்ணை தாக்கிய உதவி ஆய்வாளர்

Kanniyakumari | கன்னியாகுமரியில் விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளர் பெண்ணை தாக்கி செல்போணை பறிக்க முயலும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு நடுவூர்கரை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ். இவரது மனைவி லில்லி ஜனட்.

இவர் கடந்த 14-ம் தேதி மண்டைக்காடு காவல் நிலையத்தில் இவரது பக்கத்து வீட்டுக்காரர் சில நபர்களுடன் சேர்ந்து அரசின் உரிய அனுமதியின்றி கோயில் ஒன்றை கட்ட முயற்சிப்பதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த புகார் சம்பந்தமாக விசாரணை நடந்த மண்டைக்காடு காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன்  கடந்த 24-ம் தேதி ஞானதாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில்  போலீஸ்காரர் வீட்டிற்கு வந்துள்ளதாக லில்லி ஜெனட் தனது கணவருக்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.

Also see...உலக சுற்றுலா தினம் இன்று..!

இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் முரளிதரன் அந்த பெண்ணை அடிக்க எத்தணித்ததோடு அவரது செல்போனையும் பறிக்க முயன்றுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Attacked, CCTV, Kanniyakumari, Police, Women