Home /News /kanniyakumari /

பாத யாத்திரைக்காக ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை.. படுக்கையறை, சமையலறை வசதியுடன் 60 கேரவன்கள் தயார்

பாத யாத்திரைக்காக ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை.. படுக்கையறை, சமையலறை வசதியுடன் 60 கேரவன்கள் தயார்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Rahul Gandhi: ராகுல் காந்தியின் நடை பயணத்தை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தேசிய கொடியை அவரிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India
    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி  செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.  இந்த நிகழ்வுக்காக படுக்கையறை, சமையலறை வசதியுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரி வந்துள்ளது. மேலும், நடைபயண துவக்க நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் 'பாரத் ஜோடோ யாத்திரா' என்ற பெயரில் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். வருகிற 7ஆம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து அவர் நடை பயணத்தை தொடங்குகிறார்.

    நடை பயணத்தை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தேசிய கொடியை அவரிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு நடந்தே செல்கிறார்.

    அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அவர் நடை பயணத்தை தொடங்குகிறார். இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியில் தங்குகிறார். ராகுல் காந்தியும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் தலைவர்களும் தங்குவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது.



    இதற்காக 60 கேரவன்கள் கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்திற்கு வந்துள்ளது. இந்த 60 கேரவன்களும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த 60 கேரவன்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து செல்லும்.

    இதையும் படிங்க: குஜராத்தை தொடர்ந்து கர்நாடகாவை குறிவைக்கும் ஆம் ஆத்மி.. பெங்களூரு உள்ளாட்சித் தேர்தல் இலக்கு

    எங்கெல்லாம் இரவு ராகுல் காந்தியும் பாதயாத்திரை குழுவினரும் தங்குகிறார்களோ அங்கு இந்த கேரவன்கள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. மேலும் நடைபயண துவக்க நிகழ்ச்சி ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    செய்தியாளர் - ஐ சரவணன் நாகர்கோவில்
    Published by:Kannan V
    First published:

    Tags: CM MK Stalin, Kanyakumari, Rahul gandhi

    அடுத்த செய்தி