கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால், அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மும்பை-கன்னியாகுமரி இடையே கேரளா வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வேதுறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கொங்கன் ரயில்வே செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இன்று (வியாழக் கிழமை) பகல் 3.30 மணிக்கு சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்:01461) நாளை இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரியை வந்தடையும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல 24ஆம் தேதி (சனிக்கிழமை) பகல் 2.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (01462) மறுநாள் இரவு 11 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?
இந்நிலையில், இந்த சிறப்பு ரயிலானது தாதர், தானே, பன்வெல், ரோகா, சிப்லும், ரத்னகிரி, கன்காவ்லி, சிந்துதுர்க், சாவந்த்வாடி ரோடு, மஜ்காவ் சந்திப்பு, கர்வார், உடுப்பி, மங்களூரு சந்திப்பு, காசர்கோடு, கண்ணூர், தெலிச்சேரி, கோழிக்கோடு, சோரனுர், திரிச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்கனூர், காயங்குளம், கொல்லம், திருவனந்தபுரம், குளித்துறை மற்றும் நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Christmas, Kanyakumari, Local News, New Year 2023, Special trains