ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

அதிரப்பள்ளி வனச்சாலையில் ஆக்ரோஷமாக சுற்றும் படையப்பா..! - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

அதிரப்பள்ளி வனச்சாலையில் ஆக்ரோஷமாக சுற்றும் படையப்பா..! - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

வனத்துறையினரை மிரட்டிய ”படையப்பா”..

வனத்துறையினரை மிரட்டிய ”படையப்பா”..

Elephant Video | வனத்துறையினரின் வாகனத்தை கவிழ்க்க முயலும் படையப்பாவின் காட்சிகள் தற்போது இணையங்களிலும் வைரல் ஆகி வருகின்றன..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

அதிரப்பள்ளி வனச்சாலையில் படையப்பா என்ற காட்டு யானை அட்டகாசம் செய்துள்ளது. மேலும் வனத்துறையினரின் ஜீப்பை சேதப்படுத்த முயன்றுள்ளது.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி வனப்பகுதியில் அதிரப்பள்ளி வன சாலையில் மலக்கம்பாறை என்ற பகுதியில் படையப்பா என்று பெயரிட்டு பொதுமக்களால் அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று ஒரு சில தினங்களாக மிகவும் ஆக்ரோஷமாக சுற்றி வருகிறது.அப்பகுதியாக வரும் வாகனங்களை வழி  மறிப்பதும் வாகனங்களை சோதப்படுத்துவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து வனத்துறையினர் அந்த சாலை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ,திடீரென அங்கு வந்த காட்டு யானை அவர்களது ஜீப்பை தும்பிக்கையால் கவிழ்க்க முயன்றுள்ளது.இதை அடுத்து பல மணி நேரம் கூச்சலிட்ட வனத்துறையினரின் பேச்சைக் கேட்டு படையப்பா என்ற காட்டு யானை அப்பகுதியை விட்டு மெல்ல விலகியது.இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் யானையை கண்டால் வாகனத்தை நிறுத்தவோ அல்லது வாகனத்தில் இருந்து இறங்கி புகைப்படங்கள் எடுக்கவோ முயல வேண்டாம் எனக்கூறினர்.

Read More : ஹாயாக பைக்கில் அந்தரத்தில் பறந்த புதுமண ஜோடி.. வைரல் வீடியோ!

 மேலும் யானைக்கு மதம் பிடிக்க வாய்ப்பு இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது என அறிவுருத்தினர். வனத்துறையினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறையினரின் வாகனத்தை கவிழ்க்க முயலும் படையப்பாவின் காட்சிகள் தற்போது இணையங்களிலும் வைரல் ஆகி வருகின்றன..

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Elephant, Kanniyakumari