Home /News /kanniyakumari /

மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? காவல்நிலையத்தில் கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்ம மரணம்..

மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? காவல்நிலையத்தில் கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்ம மரணம்..

மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? காவல்நிலையத்தில் கையெழுத்து போடசென்ற இளைஞர் மர்ம மரணம்..

மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? காவல்நிலையத்தில் கையெழுத்து போடசென்ற இளைஞர் மர்ம மரணம்..

காவல் நிலையத்தில் கையெழுத்து போடசென்ற இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல்நிலையத்தில் கையெழுத்து போடசென்ற இளைஞர் மர்ம மரணம் அடைந்ததையடுத்து, காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை  செய்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே முல்லைசேரிவிளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். பால்வடிக்கும் தொழிலாளியான   இவரது மகன் அஜித் (22) ஐடிஐ முடித்து மினி லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குலசேகரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு சிறையிலடைக்கபட்டார்.

இந்நிலையில் இரண்டு மாதம் சிறையிலிருந்த பின் ஜாமீனில் வெளிவந்த அஜித் குலசேகரம் காவல்நிலைத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த 23ஆம் தேதி கையெழுத்து போடுவதற்கு குலசேகரம் காவல்நிலையம் சென்ற இளைஞர் அஜித் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் குலசேகரம் காவல்நிலைய தனிப்பிரிவு காவலர்  சோனல் பிரதீப் இளைஞர் அஜித்தின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை மிரட்டியுள்ளார். அதை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அஜித்தின் வீட்டிற்கு சென்று மிரட்டி பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளார். அதன் பிறகு அஜித்  விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும், மருத்துவமனையில் உள்ளதாகவும் கூறி  தந்தை சசிகுமாரை அழைத்து சென்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது மகனின் உயிரிழப்பிற்கு குலசேகரம் காவல்துறையினரே காரணம் என கூறி அஜித்தின் தந்தை சசிகுமார் உடலை பெற மறுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

சமீப காலமாக குலசேகரம் காவல் நிலையத்தில் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக பரவலாக குற்றசாட்டு வந்த நிலையில், காவல் நிலையத்தில் கையெழுத்து போடசென்ற இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: Kanyakumari, Lockup death

அடுத்த செய்தி