ஹோம் /நியூஸ் /Kanniyakumari /

தன்னை தானே அறுத்து கொண்டு அலறல் சத்தம் இட்டவாறு அங்கும் இங்கும் ஓடிய இளைஞர்! குமரியில் பரபரப்பு..

தன்னை தானே அறுத்து கொண்டு அலறல் சத்தம் இட்டவாறு அங்கும் இங்கும் ஓடிய இளைஞர்! குமரியில் பரபரப்பு..

தன்னை தானே அறுத்து கொண்டு அலறல் சத்தம் இட்டவாறு அங்கும் இங்கும் ஓடிய இளைஞர்! குமரியில் பரபரப்பு..

தன்னை தானே அறுத்து கொண்டு அலறல் சத்தம் இட்டவாறு அங்கும் இங்கும் ஓடிய இளைஞர்! குமரியில் பரபரப்பு..

Kanniyakumari | கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர் அஜித் (30) இவர் குழித்துறை நகராட்சி அலுவலகம் முன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்த வீடியோ இணையத்தில்வேகமாக பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மன அழுத்தத்தில் இருந்த அஜித் என்பவர் திடீரென எடுத்த விபரீத முடிவால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியை சேர்ந்த இந்திரஜித் மகன் அஜித் (30) இவர் சென்னையில் இட்லி மாவு கடை நடத்தி வருகிறார். கடந்த 31 தேதி ஊருக்கு வந்தவர் அன்று முதலே கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் எல்லாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதோடு அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் நேற்று இரவு  குழித்துறை நகராட்சி அலுவலகம் எதிரே வந்து கத்தியால் தன்னை தானே அறுத்து கொண்டு அலறல் சத்தமிட்டவாறும் குழித்துறை அரசு  மருத்துவமனைக்குள் சென்று சத்தமிட்டவாறும் அங்கும் இங்குமாக ஓடி உள்ளார். இது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் மார்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் அங்கு சென்று அவரிடம் இருந்த கத்தியை கைபற்றி அங்கு உடல் உதவி அளித்தனர்.

Read More : 3 மாதங்களுக்கு முன் திருமணமான வங்கி மேலாளர் பயங்கரவாதிகளால் கொலை - காஷ்மீரில் தொடரும் சோகம்

பின்னர் உயிருக்குப்போராடிய அஜித்தை ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தன்னை சென்னையில் இருவர் தாக்கிவிட்டதாகவும், ஊரில் இருவர் தாக்கி விட்டார்கள் எனவும் மாறி மாறி பேசிகொண்டே இருந்தார். இது சம்பந்தமாக எதற்காக இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தற்கொலை செய்ய முயற்சித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Kanniyakumari Constituency, Tamilnadu