ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

90'ஸ் கிட்ஸ் திருமணம்... அதிர்ச்சியில் கன்னியாகுமரி மக்கள்... பேனர் வைத்து கலாய்த்த நண்பர்கள்

90'ஸ் கிட்ஸ் திருமணம்... அதிர்ச்சியில் கன்னியாகுமரி மக்கள்... பேனர் வைத்து கலாய்த்த நண்பர்கள்

கல்யாண பேனர் வைரல்

கல்யாண பேனர் வைரல்

Kanniyakumari | கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்யாண சம்மந்தம் விலக்குவோருக்கு எதிரான போராட்டம் எதிரொலி"90'ஸ்-கிட்ஸ் திருமணத்தால் சேனம்விளை அருகே பரபரப்பு" அதிர்ச்சியில் மக்கள் என்று பிரபல தினசரி பத்திரிகையின் தலைப்பு செய்தி வடிவில் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட வாழ்த்து பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக திருமண வரன்களை புறம் பேசி தடுப்போரை எச்சரிக்கும் விதமாகவும் அதேப்போல் திருமண வைபவங்களின் போது மணமக்களை வாழ்த்துவதற்காகவும் 90'ஸ் கிட்ஸ் நண்பர்கள் தங்களது மூளையில் கன நேரத்தில் உதித்த எண்ணங்களை பேனர்களாக வடிவமைத்து வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் சேனம்விளையில் 90'ஸ் கிட்ஸ் நண்பர்களால் வைக்கப்பட்ட பிரபல தினசரி பத்திரிகை தலைப்பு செய்தி வடிவில் வைக்கப்பட்டுள்ள பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

சேனம்விளை பகுதியை சேர்ந்த துபாயில் கட்டுமான பொறியாளராக வேலை பார்க்கும் 31-வயதான பால் மகேர் சாலால் என்பவருக்கும் சென்னையில் ஐடி ஊழியராக வேலை பார்க்கும் ஆர்த்தி சுரேஷ் என்பவருக்கும் இன்று மாலை திருமணம் சேனம்விளை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக அவரது நண்பர்கள் சார்பில் அந்த மண்டபத்தில் பல வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பேனர் மட்டும்

கல்யாண சம்மந்தம் விலக்குவோருக்கு எதிரான போராட்டம்

"90'ஸ் கிட்ஸ் திருமணத்தால் சேனம்விளை அருகே பரபரப்பு அதிர்ச்சியில் மக்கள்"அண்ணன் திருமணத்திற்கு நண்பர்கள் பணம் கேட்டதால் மணமகனின் தம்பி தலைமறைவு.நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆறு பேர் கொண்ட குழு சார்பில் போராட்டம் எனவும் பிரபல தினசரி பத்திரிகையின் தலைப்பு செய்தி வடிவில் பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.

Also see... திருப்பதி பிரம்மோற்சவம் நான்காவது நாள் விழா..

இந்த பேனரின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Banners, Kanniyakumari, Marriage