Home /News /kanniyakumari /

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நூதன முறையில் கடத்த முயன்ற 8000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நூதன முறையில் கடத்த முயன்ற 8000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் கைது

Kanniyakumari | களியக்காவிளை அருகே நூதன முறையில் கூண்டு கட்டிய டெம்போவில் கேரளாவிற்கு கடத்த முயன்ற சுமார் 8000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில்  2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
குமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லைப்பகுதி வழியாக  தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்ணெண்ணைய் கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த நிலையில் இன்று களியக்காவிளை காவல் நிலைய உதவி  ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார்  களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில்  வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக கூண்டு கட்டிய டெம்போ ஒன்று வந்துக் கொண்டிருந்தது. டெம்போவை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். இருந்தும் அந்த டெம்போ நிற்காமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கோழிவிளை பகுதியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் என 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம்  விசாரணை செய்தபோது சிதறால் பகுதியை சார்ந்த ஜெவின் (29)  குளப்புறம் பகுதியை சார்ந்த சுஜின் (26) என்று தெரியவந்தது. மேலும் டெம்போவை சோதனை செய்து பார்த்த போது சுமார் 8000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்க்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

Also see... க்யூஆர் கோடு’ ஸ்டிக்கரை ஒட்டி நூதன மோசடி செய்த இளைஞர் கைது...

இதை தொடர்ந்து கடத்தல் வாகனம் மற்றும் அரிசி உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கபட்டது. அவர்கள் கடத்தல்  அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் கைது செய்த நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Kanniyakumari, Ration Goods, Rice

அடுத்த செய்தி