ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

“அம்மாடி எவ்ளோ பெருசு..” விவசாயி தோட்டத்தில் விளைந்த 60 கிலோ எடையுள்ள சேனைக்கிழங்கு!

“அம்மாடி எவ்ளோ பெருசு..” விவசாயி தோட்டத்தில் விளைந்த 60 கிலோ எடையுள்ள சேனைக்கிழங்கு!

60 கிலோ எடையுள்ள சேனைக்கிழங்கு

60 கிலோ எடையுள்ள சேனைக்கிழங்கு

Kanniyakumari News : கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரின் தோட்டத்தில் சாதனை முயற்சியாக விளைந்த 60 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் சேனைக்கிழங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி கல்லங்குழி பகுதியை சேர்ந்த வில்சன் (72), வட்டார வளர்ச்சி அலுவலராக பணியில் இருந்து ஓய்வு பெற்று விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது தோட்டத்தில் சேனைக்கிழங்கு, வாழை, தென்னை போன்ற பயிர்களை நடவு செய்து விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

அதிக அளவில் சேனைக்கிழங்கு பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார். இதற்கிடையில், கேரளாவை சேர்ந்த விவசாயி ஒருவர் 45 கிலோ எடை கொண்ட சேனைக்கிழங்கை அறுவடை செய்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்த செய்தியை அறிந்தார்.

இந்நிலையில், அந்த சாதனையை முறியடிக்கும் விதத்தில் வில்சன் சோதனை முயற்சியாக சேனைக்கிழங்கு செடிகளை வளர்க்க தொடங்கியுள்ளார். அதன்படி தற்போது ஆளுயர வளர்ந்து அறுவடைக்கு தயாரான சேனைக்கிழங்கு செடிகளை அறுவடை செய்துள்ளார்.

60 கிலோ எடையுள்ள சேனைக்கிழங்கு

இதையும் படிங்க : மாவா விற்பதை போலீசில் போட்டு கொடுத்தவர் மீது கொடூர தாக்குதல்... சென்னையில் பயங்கரம்!

அப்போது, ஒரு செடியில் 60 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் சேனைக்கிழங்கும், மற்றொரு செடியில் 55 கிலோ எடை கொண்ட சேனைக்கிழங்கும் இருந்தது.

இதை அந்த பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும், வில்சன் தான் அறுவடை செய்த மெகா சைஸ் சேனைக்கிழங்கை சாதனை பட்டியலில் இடம் பெற செய்ய தமிழக அரசின் தோட்டக்கலை துறை அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளார்.

First published:

Tags: Agriculture, Kanniyakumari, Local News