Home /News /kanniyakumari /

தக்கலையில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை விற்பனை... 2 பெண்களுக்கு சிறை தண்டனை...

தக்கலையில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை விற்பனை... 2 பெண்களுக்கு சிறை தண்டனை...

கன்னியாகுமரி - 2 பெண்கள் கைது

கன்னியாகுமரி - 2 பெண்கள் கைது

kanniyakumari | கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த 10-கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் அந்த பகுதியில் உள்ள கடைகளை திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது இரணியல் சாலையில் அமைந்துள்ள இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைகளின் உரிமையாளர்கள் குளோரி மற்றும் விலாஷினி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Also see... பேஷன் ஷோவில் ராம்ப் வாக் நடந்த போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

பின்னர் அவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 10-கிலோ நச்சு புகையிலைகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Kanniyakumari, Tobacco

அடுத்த செய்தி