ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி ஆசிரியையின் செயினை பறித்த இளைஞர்கள்... சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை

இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி ஆசிரியையின் செயினை பறித்த இளைஞர்கள்... சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை

ஆசிரியரை தள்ளிவிட்ட 2 இளைஞர்கள்

ஆசிரியரை தள்ளிவிட்ட 2 இளைஞர்கள்

Kanniyakumari | கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியை செயினை பறித்த இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரமிளா. தனியார் பள்ளி ஆசிரியையான இவர் நேற்று மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் கிராத்தூர் வளைவு பகுதியில் வைத்து பிரமிளாவின் இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டனர்.

பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் கிடந்த 5 அரை சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதில் ஆசிரியருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.  அந்த பகுதிகளில் பதிவாகி உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆசிரியையின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை வாலிபர்கள் பறித்து விட்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று கடந்த ஒருசில தினங்களுக்கு முன் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also see... அம்பத்தூரில் மலைபோல் குப்பைகள் தேக்கம்

அந்த நபர்களை போலீசார் தேடி வரும் நிலையில் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: CCTV, Kanniyakumari