ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

நாகர்கோவில் அருகே பள்ளி மாணவி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை

நாகர்கோவில் அருகே பள்ளி மாணவி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை

தற்கொலை செய்துக்கொண்ட மாணவி

தற்கொலை செய்துக்கொண்ட மாணவி

Kanniyakumari | கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே  பள்ளி மாணவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். இந்த தற்கொலைகள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kanniyakumari, India

  கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி  வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர்  ரம்யா(15). அதே பகுதியில் உள்ள  அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் உள்ள  செல்போனில் அவ்வப்போது விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று விளையாடிக் கொண்டிருந்த போது தாயார் மகளை திட்டியதாக தெரிகிறது.

  இதனால் கோபத்துடன் ரம்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரம்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இதேபோன்று நாகர்கோயில் அருகே கீழப் பெருவிளை பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் பேட்டரி கடை நடத்தி வரும் நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் இன்று காலை கடைக்கு சென்று பார்த்த போது கடையினுள் விஜயன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

  Also see... வேலூரில் தெருக்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்:

  இச்சம்பவம் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ஐ.சரவணன்,  நாகர்கோவில்


  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Commit suicide, Crime News, Kanniyakumari