லாரி டிரைவர் என்றும், செக்ஸ் பற்றியும் எழுதி சுஷாந்த்துக்கு டார்ச்சர் கொடுத்தது சில மீடியாக்கள்தான் - கங்கனா ரனாவத்

சினிமா உலகத்தில் இருந்த நெருக்கடியால் சுஷாந்த் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார் என்று கூறியதாக opindia தளத்துக்கு கங்கனா ரனாவத் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

லாரி டிரைவர் என்றும், செக்ஸ் பற்றியும் எழுதி சுஷாந்த்துக்கு டார்ச்சர் கொடுத்தது சில மீடியாக்கள்தான் - கங்கனா ரனாவத்
சினிமா உலகத்தில் இருந்த நெருக்கடியால் சுஷாந்த் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார் என்று கூறியதாக opindia தளத்துக்கு கங்கனா ரனாவத் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
  • Share this:
”சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்களுடைய மரணத்திற்குப் பின்னர் பல விஷயங்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றன. இது தொடர்பாக நான் சில நேர்காணல்களை படித்தேன், நேரடியாக சிலரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவருடைய தந்தை கூறியதன்படி சினிமா உலகத்தில் இருந்த நெருக்கடியால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார் என்று கூறியதாக” opindia தளத்துக்கு கங்கனா ரனாவத் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சுஷாந்தை திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்திய அபிஷேக் கபூரின் கருத்தின்படி இது திட்டமிட்டு பலவீனமான மனதின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். மேலும் அவருடைய நீண்டகால தோழி சங்கீதா லோகண்டே அவரது மரணத்தை சமூக அவமானத்தின் விளைச்சல் என்கிறார்.

மற்றொரு விஷயம் என்னவென்றால் மூவி மாஃபியாக்கள் அவரை சினிமாவில் தடை செய்தது மட்டுமின்றி சிறிது சிறிதாக அவரது மனதை உடைத்து அவரை கொலை செய்திருக்கிறார்கள்


கிசு கிசு எழுதுவதின் நோக்கம் பொய் சொல்வதுதான். மேலும் அவ்வாறான எழுத்துக்களின் மீது, உங்கள் பெயர் இல்லாத காரணத்தால், சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்க முடியாது. என்னைப் பற்றி எழுதினால் சுருள்முடி கொண்ட, தேசிய விருது பெற்ற, சைக்கோ, மணலியை பூர்விகமாகக் கொண்டவர் என்று முழுமையாக விவரித்து எழுதுவார்கள். ஆனால் பெயரை குறிப்பிட மாட்டார்கள்.

31 ஆகஸ்ட் 2017 பாலிவுட் லைஃப் என்கிற பத்திரிகை சுஷாந்த்தைப் பற்றி  எழுதும்போது, அவர் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பொழுது தன்னுடைய பாடலையே கேட்குமளவுக்கு அதீத தன் மைய சிந்தனை கொண்டவர் என்று எழுதியது. டிசம்பர் 16 2016-இல் மும்பை மிரர் சுஷாந்த் சிங் ராஜ்புத் லாரி டிரைவரை போன்று தோற்றமளிப்பவர் என்று எழுதியது.


 
View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on


ஃபிப்ரவரி 22, 2009 இல் மும்பை மிரர், ஒரு பார்ட்டியில் இயக்குனர் ஒருவர் மீது பாட்டிலை வீசினார் என்று எழுதியது. அக்டோபர் 18 2018-இல் டிஎன்ஏ சுஷாந்த் தன்னுடைய சக நடிகையை வன்புணர்ச்சி செய்ததாகவும் Me too இயக்கத்தில் அவர் சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் எழுதியது. இதுபோன்று இன்னும் எத்தனை எத்தனை பொய்களை இவர்கள் எழுதி இருக்கிறார்கள் என்று தெரியாது.

மூவி மாஃபியாக்களால் வளர்த்து எடுக்கப்படும் இந்த அறிவுஜீவி பத்திரிக்கையாளர்கள், கழுகு,காகம் போன்ற இவர்கள் உணர்வு மற்றும் மன ரீதியாக தாக்குதல் தொடுத்து கொலைகளில் ஈடுபடுகிறார்கள். என்னைப் பற்றி எழுதிய பல பொய்களுக்கு எதிராக நான் சட்ட ரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஆனால் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை பற்றி கீழ்த்தரமாக எழுதப்பட்ட போது நான் அந்த ஊடகவியலாளரை எதிர்த்தேன். அன்று இரவே 4 ஊடகவியலாளர்கள் என்னுடைய படங்களை நிராகரித்து அவற்றை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். 3000 ஊடகவியலாளர்கள் சேர்ந்துகொண்டு ஒரு பெண்ணை உணர்வு ரீதியாக தாக்கும்போது சமூகமும், சட்டமும் அமைதியாக வேடிக்கை பார்த்தது.

நான் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முயற்சி செய்தேன். ஆனால் ஒரு மாதத்திற்கு பிறகு என்னுடைய திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்த பின்னர் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள். இந்த சமூகம் அநீதியை அடித்தளமாக கொண்டிருக்கிறது. நியாயமாக குரலெழுப்ப வேண்டிய நேரத்தில் குரல் எழுப்புவதில்லை.

Read More:- யாரும் இங்கு தனியாக இல்லை: அனைத்துக்கும் மேலாக நம்பிக்கை இருக்கிறது - தீபிகா படுகோன்

இதுபோன்ற பொய்களைப் படித்து உற்சாகமடையும் நீங்கள், சினிமா வாரிசுகள் குறித்து இப்படியான செய்திகள் ஏன் வருவதில்லை என்று என்றாவது சிந்தித்ததுண்டா? என்று எழுதியிருக்கிறார்.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading