Home /News /kanchipuram /

விநாயகர் சதுர்த்தி.. காஞ்சிபுரத்தில் இறுதிக்கட்ட வியாபாரம் மும்முரம்

விநாயகர் சதுர்த்தி.. காஞ்சிபுரத்தில் இறுதிக்கட்ட வியாபாரம் மும்முரம்

காஞ்சிபுரம் - மார்க்கெட்

காஞ்சிபுரம் - மார்க்கெட்

Kancheepuram | இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி கொண்டாடப்பட உள்ளதால் பொதுமக்கள் ஆவலுடன் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India
    தமிழகத்தில் இரண்டு வருடங்கள் கழித்து விநாயகர் சதுர்த்தி திதியன்று விநாயகர் வைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித கட்டுப்பாடும் இன்றி இந்த வருடம் கொண்டாட உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் இருந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது வியாபாரம் மந்தமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடின்றி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் ஆவலுடன் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம் பகுதியைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மார்க்கெட் பகுதி, பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம் தேரடி ஆகிய பகுதிகளில் விநாயகர் விநாயக சதுர்த்திக்கு தேவையான குடை, பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்க இன்று மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் காஞ்சிபுரத்தில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    பூக்கடை சத்திரம் பகுதியில் கடந்த ஆண்டை விட தற்போது பூக்களின் விலை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒரு கிலோ மல்லி 700 இருந்து 1000 ரூபாய் விற்பனையாகிறது. இதனால் பூக்களை வாங்க பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.

    Also see... விநாயகர் சதுர்த்தி உருவான கதை | vinayagar chaturthi story ..

    அதேபோல கிராமங்கள் மற்றும் நகரத்தில் பல இடங்களில் விநாயகர் சிலை அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி அனுமதி கொடுக்கப்பட்ட இடங்களுக்கு சிலைகளை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வாகனங்களில் வைத்துக்கொண்டு எடுத்து செல்லும் காட்சிகளும் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இரண்டு வருடம் கழித்து விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெற உள்ளதால் காஞ்சிபுரம் மாநகரமே களைகட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: சந்திரசேகர், காஞ்சிபுரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Kancheepuram, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி