ஹோம் /நியூஸ் /kanchipuram /

காஞ்சிபுரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

காஞ்சிபுரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

கைதானவர்கள்

கைதானவர்கள்

Kanchipuram District News : காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான உத்திரமேரூர் தாலுகா, அன்னாதூர் கிராமத்தை சேர்ந்த அன்னாதூர் மணி (எ) மணிகண்டன்(26) என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரைத்ததன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உத்தரவிட்டிந்தார்.

இதேபோல், உத்திரமேரூர் தாலுகா, திருப்புலிவனம் கிராமத்தை சேர்ந்த ருத்ரா (எ) உத்திரகுமார்(28) என்பவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரைத்ததன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிங்க : சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அவதி..

 இந்நிலையில், குற்றவாளிகள் இருவரையும் ஓராண்டு தடுப்புக் காவலில் (GOONDAS) வைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக்

First published:

Tags: Kanchipuram, Local News