முகப்பு /செய்தி /kanchipuram / கூல் ட்ரிங்ஸ் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை குடித்த மூன்று குழந்தைகள் - அங்கன்வாடி ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்

கூல் ட்ரிங்ஸ் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை குடித்த மூன்று குழந்தைகள் - அங்கன்வாடி ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்

அங்கன்வாடி ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்

அங்கன்வாடி ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடியில் குளிர்பானம் என நினைத்து கூல் ட்ரிங்ஸ் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை மூன்று குழந்தைகள் குடித்த விவகாரத்தில் ஊழியர் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே செல்வவழிமங்களத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கடந்த 6ந் தேதியன்று மதியம் சுமார் 1.30மணியளவில் செல்வவழிமங்கலம் ஜம்போடை தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரது மூன்று வயது மகன் யோகேஷ், ஒன்றரை வயது மகள் வம்சிகா மற்றும் குமாரசாமி என்பவரது 2வயது மகள் பிரியதர்ஷினி ஆகிய மூன்று குழந்தைகளும் அங்கன்வாடி மையத்தில் அரை லிட்டர் கூல் ட்ரிங்ஸ் பாட்டிலில் வைத்திருந்த மண்ணையை, எதிர்பாராத விதமாக குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளதில் குழந்தைகள் மூவரும் வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளனர்.

பின்னர் இது குறித்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டும், உடனடியாக மூன்று குழந்தைகளும் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மூன்று குழந்தைகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் தற்போது மூன்று குழந்தைகளும் நலமுடன் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

மேலும் செல்வவழிமங்களத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் இவ்விவகாரம் தொடர்பாக குழந்தைகளை முறையாக பராமரிக்காத அங்கன்வாடி மைய ஊழியர் சோபா மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய இருவரும்  பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

அங்கன்வாடி மையத்தில் குளிர்பானம் என நினைத்து கூல் ட்ரிங்ஸ் பாட்டிலில் வைத்திருந்த மண்ணையை மூன்று குழந்தைகள் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Kanchipuram