Home /News /kanchipuram /

மின் கட்டண உயர்வு தனி நபர் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்- ஜி.கே.வாசன்

மின் கட்டண உயர்வு தனி நபர் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்- ஜி.கே.வாசன்

தமாக தலைவர் ஜி.கே.வாசன்

தமாக தலைவர் ஜி.கே.வாசன்

Kancheepuram | தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து அதையே நிறைவேற்றாத அரசு, மேலும் மக்களுக்கு சங்கடங்களை கொடுக்கக்கூடிய அரசாக திமுக அரசு செயல்படுகிறது என்று தாமக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kancheepuram (Kanchipuram), India
  மக்களுடைய சுமையை குறைக்க கூடிய அரசாக செயல்பட வேண்டுமென்றால் கௌரவம் பார்க்காமல் மக்கள் நலனை கருதி உடனடியாக மின்சார கட்டணம் உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்  என்றும் இல்லையென்றால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். 

  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி டில்லி பாபு இல்ல திருமண விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமாக தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி, " தமிழக அரசின் மின் கட்டண உயர்வு என்பது அரசினுடைய மிக மோசமான அறிவிப்பு. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு சொத்து வரியை ஏற்றிவிட்டு கொஞ்சம் கூட மக்கள் மீது அக்கறை இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக மின்  கட்டணத்தை தங்களுடைய லாபத்திற்காக ஏற்றுவது என்பதை ஏற்க முடியாது.

  உண்மையிலேயே ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் மற்றும் தமிழகத்தினுடைய பொருளாதாரம் வளர்ச்சிபற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு. இதனுடைய தாக்கம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பொருளாதார ரீதியாக சங்கடங்கள் ஏற்படும்.

  எனவே தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து அதையே, நிறைவேற்றாத அரசு மேலும் மக்களுக்கு சங்கடங்களை கொடுக்கக்கூடிய அரசாக இந்த அரசாங்கம் செயல்படுகிறது. மக்களுடைய சுமைகளை குறைக்க வேண்டும் என்றால் உடனடியாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, கவுரவம் பார்க்காமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மின்சார உயர்வு அறிவிப்பை அரசு வாபஸ் பெற வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

  அதனைத் தொடர்ந்து பேசியவர், “ மின்சார உயர்வு வாபஸ் பெறவில்லை என்றால் இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஒரு பக்கம் இந்த தேர்வை நிறுத்தி விடுவோம் என்று மாணவர்களிடமும்  பெற்றோரிடமும் தவறான கருத்தை வெளியிடுகிறது. மறுபக்கம் அது சாத்தியம் இல்லை என்று அவர்களுக்கு தெரிகிறது. அப்படி இருந்தால் ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் மீது அரசுக்கு அக்கறை இருந்தால் நிச்சயமாக நீட் பயிற்சி மையங்களை முறையாக அரசு நடத்தி இருக்க வேண்டும்.

  அதை செய்யத் தவறிய அரசு மாணவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறார்கள். அரசு இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் அரசினுடைய இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

  பரந்தூர் விமான நிலையம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,” தமிழக அரசு அந்த பகுதி மக்களிடம் ஆசை காட்டி மோசம் செய்ய நினைக்கிறது. அது எடுபடாது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்களுடைய எண்ணங்களை அரசு பிரதிபலிக்க வேண்டும்.  அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு 100% மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு அந்தப் பணியை அவர்கள் செய்வது நல்லது. வளர்ச்சி தேவை அதிலே யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் யாருக்கும் இடைஞ்சல் இல்லாத வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும்” என்று கூறினார்.

  Also see...திருச்சி காவிரி பாலம் மூடல் : தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு

  பின்னர் காங்கிரஸ் கட்சியினுடைய பாத யாத்திரை குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,” காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவிலே பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களுக்கு  பாதயாத்திரை தேவைப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் ஏதாவது லாபமா என்றால் இல்லை என்பதுதான் எல்லோருடைய கருத்தும்” என தெரிவித்தார்

  செய்தியாளர்: சந்திர சேகர், காஞ்சிபுரம்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Airport, EB Bill, GK Vasan, Kancheepuram, Neet Exam, Tamil Maanila Congress‎

  அடுத்த செய்தி