முகப்பு /செய்தி /kanchipuram / செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழப்பு… நீச்சல் தெரியாமல் குளித்ததால் விபரீதம்

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழப்பு… நீச்சல் தெரியாமல் குளித்ததால் விபரீதம்

நீரில் மூழ்குவதற்கு முன்பாக, தண்ணீருக்குள் இறங்கும் ஜெகதீசன்

நீரில் மூழ்குவதற்கு முன்பாக, தண்ணீருக்குள் இறங்கும் ஜெகதீசன்

ஏரியில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் மாணவனின் குடும்பத்தினர் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன்(17). கோவூர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தனது நண்பர்களான சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றவர் ஏரிக்கரையில் உள்ள படியில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தார். அவரது நண்பர் சூர்யா நீச்சல் அடித்தபடி குளித்து கொண்டிருந்தபோது, ஜெகதீசனை நீச்சல் அடிக்கும்படி அழைத்துள்ளார். அப்போது நீச்சல் தெரியாத ஜெகதீசன் ஏரியில் இறங்கியபோது மூழ்கினார்.

அவரை மீட்க சூர்யா போராடிய போது, மீட்க முடியவில்லை. இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய ஜெகதீசனை தீவிரமாக தேடி வந்த நிலையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீச்சல் தெரியாமல் ஏரியில் மூழ்கி ஜெகதீசன் இறந்து போன வீடியோ  காட்சிகள் வெளியாகி தற்போது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏரியில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த  சம்பவம் மாணவனின்  குடும்பத்தினர் உறவினர்கள் இடையே பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Kanchipuram